Jasprit Bumrah: அப்பாவானார் பும்ரா! மகனுக்கு வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா?
மனைவியின் முதல் பிரசவத்துக்காக ஆசிய கோப்பை தொடர் பாதியிலேயே ரிட்டர்ன் ஆகியுள்ளார் பும்ரா. மீண்டும் சூப்பர் 4 சுற்றில் பங்கேற் அவர் நாளை அல்லது நாளை மறு நாள் கிளிம்பிவிடுவார்.
ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வரும் பும்ரா, மனைவியின் முதல் பிரசவத்துக்காக பாதியிலேயே மும்பை திரும்பினார். இதையடுத்து பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதியினருக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், சேயும் நலமாக இருந்து வரும் நிலையில், தான் அப்பாவாகி இருப்பதை இன்ஸ்டாவில் தெரிவித்தார்.
அத்துடன் தனது மகனின் பெயரையும் வெளிப்படுத்தியுள்ளார். மனைவி, தனது குழந்தை ஆகியோரின் கைகளுடன் தனது கையும் அருகே வைத்தவாறு புகைப்படத்தை பகிர்ந்து, "எங்கள் சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது. எங்கள் இதயங்கள் நாங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவில் நிரம்பியுள்ளன!
இன்று காலையில் எங்களது குழந்தை அங்கத் ஜஸ்பிரித் பும்ராவை உலகுக்கு வரவேற்றுள்ளோம். நிலவுக்கு மேல் இருப்பதாக உணர்கிறோம். ஜஸ்பிரித் மற்றும் சஞ்சனா" என்று குறிப்பிட்டுள்ளார்.
சக வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பும்ராவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குழந்தை பிறப்பின்போது மனைவியுடன் இருப்பதற்காக ஆசிய கோப்பை தொடரின் பாதியிலிருந்து திரும்பியுள்ள பும்ரா நாளை அல்லது நாளை மாறுநாள் மீண்டும் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயத்தில் இருந்து மீண்ட பிறகு சுமார் 11 மாதங்களுக்கு பிறகு அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் கம்பேக் கொடுத்தார் பும்ரா. இந்த தொடரின் கேப்டனாகவும் செயல்பட்ட பும்ரா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றார்.
இதையடுத்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முழு உடற்தகுதியுடன் பங்கேற்ற பும்ரா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மழை காரணமாக ரத்தானதால் துர்தஷ்டவசமாக பவுலிங் செய்ய முடியாமல் போனது. அதே சமயம் பேட்டிங்கில் சிறிய கேமியோ இன்னிங்ஸ் விளையாடி பும்ரா, 16 ரன்கள் எடுத்து அணிக்கு நல்ல பினிஷிங்கை கொடுத்தார்.
டாபிக்ஸ்