Australia vs Pakistan டெஸ்ட், 2வது நாள்: ஆஸ்திரேலியா 487 ரன்களுக்கு ஆல் அவுட்!
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் போட்டியின் முதல் டெஸ்ட் இரண்டாம் நாள் போட்டி: தொடக்க AUS vs PAK டெஸ்டின் 2வது நாளிலிருந்து நேரடி அறிவிப்புகளைப் பின்பற்றவும்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடக்கும் பாகிஸ்தானுடனான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 487 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தானின் அறிமுக வீரர் அமீர் ஜமால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா சென்று 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடத்திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டி நேற்று(டிசம்பர் 14) தொடங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இன்று நண்பகல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113.2 ஓவர்களுக்கு 487 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது. பாகிஸ்தானின் அறிமுக வீரர் அமீர் ஜமால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 164 ரன்களைத் தொடக்க நாளில் எடுத்தார். அதன்பின், மிட்செல் மார்ஷ் 16 ரன்களும்; அலெக்ஸ் கேரி 15 ரன்களும் எடுத்தபிறகு, ஐந்துவிக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் எடுத்தார்.
முதல் நாளில் பதற்றமடையாத மார்ஷ் சதம் அடிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் மதிய உணவுக்குப் பிறகு 90 ரன்கள் எடுத்திருந்தபோது, பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் குர்ரம் ஷாஜாத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் வீரர்களான ஷாஜாத் 83 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளும், அறிமுக பாகிஸ்தான் வீரர் அமீர் ஜமால் 111 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
முன்னதாக, பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் 1995ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் தொடரை வென்றதில்லை.
ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணியின் வீரர்கள் குறித்த நிலவரம்:
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், ஷான் மசூத் (கேப்டன்), பாபர் அசாம், சவுத் ஷகீல், சர்பராஸ் அகமது, சல்மான் அலி ஆகா, ஃபஹீம் அஷ்ரப், ஷஹீன் ஷா அப்ரிடி, அமீர் ஜமால், குர்ரம் ஷாஜாத் ஆகியோர் ஆவர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9