Ravindra Jadeja: மாற்றத்துக்கான நேரம்..! இனி ஜடேஜாவை ஒரு நாள் கிரிக்கெட்டில் பார்க்க முடியாது - பக்கா பிளானில் பிசிசிஐ
இனி ஆல்ரவுண்டர் ஜடேஜாவை ஒரு நாள் கிரிக்கெட்டில் பார்க்க முடியாத விதமாக பக்கா பிளானில் உள்ளது பிசிசிஐ. மாற்றத்துக்கான நேரம் இது என இலங்கைக்கு எதிரான தொடரில் ஜடேஜா சேர்க்கப்படாதது குறித்து கருத்தும் வெளியாகியுள்ளது.

டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, அநேகமாக இனி ஒரு நாள் அணியில் சேர்க்கப்படுவரா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய அணியின் ஸ்டார் ஆல்ரவுண்டராக திகழ்ந்த ஜடேஜா, நடந்து முடிந்து டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோரை பின் தொடர்ந்து தனது ஓய்வை அறிவித்தார்.
இருப்பினும் எதிர்வரும் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா பெயர் இடம்பெறவில்லை. இவரை போல் மற்றொரு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவும் சேர்க்கப்படவில்லை. அதேவேலையில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவும் இந்த தொடரில் இல்லை.
இந்த சூழ்நிலையில் பும்ராவுக்கு பணிச்சுமையை குறைக்கும் விதமாக ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காக பாண்டியா பிரேக் தேவை என கேட்டுக்கொண்டதால் சேர்க்கப்படவில்லை என பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ஜடேஜா விஷயத்தில் பிசிசிஐ முக்கிய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
