Ishan Kishan: வானவேடிக்கை காட்டி அரைசதமடித்த இஷான் கிஷன் - ருதுராஜ் பொறுப்பான பேட்டிங்
ஓபனிங்கில் ஜெய்ஸ்வால் என்றால் மிடில் ஓவர்களில் அவரைபோல் அதிரடி காட்டிய மற்றொரு இளம் வீரரும் இடது கை பேட்ஸ்மேனுமான இஷான் கிஷன் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இவருடன் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து வந்த ருதுராஜ் கெய்க்வாட் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்திலுள்ள கிரீன் பீல்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா அதிரடியாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இளம் இடது கை பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்லவால் தொடக்கம் முதலே பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டு பவர்ப்ளே முடிவதற்குள் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
சீன் அபாட் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் மட்டும் மூன்று பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என 24 ரன்களை அடித்தார் ஜெய்ஸ்வால். 24 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்த அவர், 53 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
ஜெய்ஸ்வால் அவுட்டானபோது அணியின் ஸ்கோர் 5.5 ஓவரில் 77 ரன்கள் என இருந்தது. அப்போது பேட் செய்ய வந்த மற்றொரு இளம் இடது கை பேட்ஸ்மேனான இஷான் கிஷன், ஜெய்ஸ்வால் விட்டதை தொடர்ந்தார்.
மிடில் ஓவரிகளில் கிஷன் அதிரடி காட்டி, அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தார் மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட். ஆட்டத்தின் 14.4 ஓவரில், ஆஸ்திரேலியா பவுலர் சங்கா வீசிய பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு அரைசதத்தை பூர்த்தி செய்தார் கிஷன். தனது இன்னிங்ஸில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை அடித்த அவர் 29 பந்துகளில் அரைசதமடித்தார்.
இதன் பின்னர் ஆட்டத்தின் 15.2 ஓவரில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோய்னிஸ் வசம் சிக்கினார். கிஷன் அவுட்டாகும்போது அணியின் ஸ்கோர் 164 என இருந்தது. கிஷன் அவுட்டான பின்பு பொறுமையாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்ட வந்த ருதுராஜ் கெய்க்வாட் 39 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
டாபிக்ஸ்