IPL 2024, CSK Vs LSG: டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த லக்னோ.. சொந்த மண்ணில் பேட்டிங்கில் ஜொலிக்குமா சென்னை?
IPL 2024, CSK Vs LSG: ஐபிஎல் 2024 தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (ஏப்ரல் 23) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் பெளலிங் தேர்வு செய்துள்ளார். லக்னோ அணியில் எந்த மாற்றமும் இன்றி இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறது. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ரச்சின் ரவீந்திராவுக்கு பதிலாக டேரில் மிட்செல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 போட்டிகளில் 4 வெற்றியுடன் நான்காவது இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 போட்டிகளில் 4 வெற்றியுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.