INDW vs ENGW: பேட்டிங்கில் அதிரடி! பவுலிங்கில் சரவெடி - இங்கிலாந்துக்கு எதிராக இந்திய மகளிர் அபாரம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Indw Vs Engw: பேட்டிங்கில் அதிரடி! பவுலிங்கில் சரவெடி - இங்கிலாந்துக்கு எதிராக இந்திய மகளிர் அபாரம்

INDW vs ENGW: பேட்டிங்கில் அதிரடி! பவுலிங்கில் சரவெடி - இங்கிலாந்துக்கு எதிராக இந்திய மகளிர் அபாரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 15, 2023 09:50 PM IST

இரண்டாவது நாளில் கூடுதலாக 18 ரன்கள் எடுத்து இந்தியா ஆல்அவுட்டானது. அதன் பின்னர் அபாராக பவுலங்கில் செய்து இங்கிலாந்தை 136 ரன்களில் சுருட்டியது

விக்கெட் வீழ்த்திய தீப்தி ஷர்மாவை பாராட்டும் சக வீராங்கனைகள்
விக்கெட் வீழ்த்திய தீப்தி ஷர்மாவை பாராட்டும் சக வீராங்கனைகள் (PTI)

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்த இந்தியா கூடுதலாக 18 ரன்களில் எஞ்சிய மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இந்திய மகளிர் தனது முதல் இன்னிங்ஸில் 428 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து மகளிர், இந்திய பவுலிங்கை தாக்குபிடிக்க முடியாமல் 136 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து பேட்டர்களில் நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் மட்டும் அரைசதமடித்து அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்தார். இந்திய பவுலர்களில் ஆஃப் ஸ்பின்னர் தீப்தி ஷர்மா வெறும் 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்னேக் ராணா 2 விக்கெட்டுகளை எடுத்தார். அபார பவுலிங்கால் 292 ரன்கள் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 42 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் ஹர்மன் ப்ரீத் கெளர் 44, பூஜா வஸ்த்ராகர் 17 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள். இங்கிலாந்து பவுலர்களில் சார்லி டீன் 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

தற்போதைய நிலையில் இந்திய மகளிர் அணி 478 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையிலேயே உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.