INDW vs AUSW 1st Innings: 4 விக்கெட்டுகளை அள்ளிய பூஜா வஸ்திரகர்-219 ரன்களில் சுருண்டது ஆஸி., மகளிர்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Indw Vs Ausw 1st Innings: 4 விக்கெட்டுகளை அள்ளிய பூஜா வஸ்திரகர்-219 ரன்களில் சுருண்டது ஆஸி., மகளிர்

INDW vs AUSW 1st Innings: 4 விக்கெட்டுகளை அள்ளிய பூஜா வஸ்திரகர்-219 ரன்களில் சுருண்டது ஆஸி., மகளிர்

Manigandan K T HT Tamil
Dec 21, 2023 03:52 PM IST

Australia Women 1st Innings: ஆஸ்திரேலிய அணியில் டஹிலா மெஹ்ராத் மட்டுமே அரை சதம் விளாசினார்.

இந்திய வீராங்கனை பூஜா வஸ்திரகரை கொண்டாடிய சக வீராங்கனைகள் (PTI Photo/Shashank Parade)
இந்திய வீராங்கனை பூஜா வஸ்திரகரை கொண்டாடிய சக வீராங்கனைகள் (PTI Photo/Shashank Parade) (PTI)

ஆஸ்திரேலியா 77.4 ஓவர்களில் மொத்தம் 219/10 ரன்களை எடுத்தது. இதையடுத்து இந்திய மகளிர் அணி தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.

இந்திய பயிற்சியாளர் அமோல் முசும்தார் தனது வீரர்களை டிரஸ்ஸிங் ரூமிற்கு திரும்பியபோது கைதட்டி மகிழ்ச்சியடைந்தார்.

ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரே ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட ஆட்டத்தில் விளையாடுகிறது.

இன்று டெஸ்ட் கிரிக்கெட் காலை 9.30 மணிக்கு மும்பையில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ஃபோப் லிட்ச்ஃபீல்ட் டக் அவுட்டாகி பெவிலியனை நோக்கி திரும்பிச் சென்றார், மூனி 40 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். டஹிலா, கேப்டன் ஹீலி ஆகியோர் மட்டுமே பார்ட்னர்ஷிப் அமைத்து மிக மோசமான சூழ்நிலையில் இருந்து ஆஸ்திரேலிய அணியை கவுரமான நிலைக்கு கரை சேர்த்தனர்.

டஹிலா மெஹ்ராத் அரை சதம் விளாசி ஆட்டமிழந்தார். கேப்டன் ஹீலி 38 ரன்களில் நடையைக் கட்டினார். இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்திரகர் 4 விக்கெட்டுகளையும், ஸ்நே ரானா 3 விக்கெட்டுகளையும் அள்ளினர். தீப்தி சர்மாவுக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன. இவ்வாறாக அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆஸ்திரேலிய அணி 219 ரன்களில் முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.

தனது முதல் இன்னிங்ஸை இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது. ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.