Tamil News  /  Cricket  /  Indians Were Getting To Me All I Said Was Marnus On Kohli Stare Sledging

Marnus Labuschagne: கோலி லபுசேனை முறைத்து பார்த்தது ஏன்?

Manigandan K T HT Tamil
Nov 21, 2023 05:30 PM IST

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பேட்டிங் செய்தபோது இந்திய ஃபீல்டர்கள் எனது கவனத்தை திசைதிருப்ப முயன்றனர் என மார்னஸ் லாபுஷாக்னே தெரிவித்தார்.

விராட் கோலி, மார்னஸ் லபுசேன்
விராட் கோலி, மார்னஸ் லபுசேன் (Screengrab)

ட்ரெண்டிங் செய்திகள்

கடைசி வரை ஆட்டமிழக்காம் இருந்த லபுசேன் அரை சதம் விளாசினார். அவரும், டிராவிஸ் ஹெட்டும் அசத்தலாக விளையாடி கலக்கினர்.

அப்போது ஒரு கட்டத்தில் மார்னஸ், டிராவிஸ் கூட்டணியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் போராடிக் கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மார்னஸ் லபுசேனை சீண்டியும் பார்த்தனர். கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் கோபப்படுத்த முயன்றால் சட்டென்று தூக்கி அடிக்க பார்த்து ஆட்டமிழந்துவிடுவார்கள். இதுபோன்ற செய்யக் கூடாது என்பது ஒருபக்கம் இருந்தாலும் விராட் கோலி, லபுசேனை உற்றுநோக்கிய விதம் அவ்வாறே இருந்தது.

ஆனால், அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார் லபுசேன்.

"மைதானத்தில் எங்களும் நீல மயமாக இருந்தது. இந்திய ஃபீல்டர்கள் என்னை கோபப்படுத்த முயன்றனர். ஏதோ கூறினர்.

ஆனால், நான் ரசிகர்கள் எழுப்பும் சப்தத்தில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என கேட்கவில்லை என்று கூறிவிட்டு நகர்ந்தேன்" என்றார் லபுசேன்.

2011 இல் கோலியைப் போலவே, லபுசேனுக்கு இதுதான் முதல் உலகக் கோப்பை தொடர் ஆகும். தனது முதல் உலகக் கோப்பையில் உலக சாம்பியனானார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஓவலில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியின் ஒரு பகுதியாகவும் இருந்தார் லபுசேன். ஆஷ்டன் அகர் காயத்தால் வெளியேறிய பிறகுதான், மார்னஸுக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் லபுசேன்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel