HBD MS Dhoni: விளையாட்டு உலகின் ஐகான், ரோல்மாடல்!இந்திய கிரிக்கெட்டின் சிறந்த தலைவன்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Hbd Ms Dhoni: விளையாட்டு உலகின் ஐகான், ரோல்மாடல்!இந்திய கிரிக்கெட்டின் சிறந்த தலைவன்

HBD MS Dhoni: விளையாட்டு உலகின் ஐகான், ரோல்மாடல்!இந்திய கிரிக்கெட்டின் சிறந்த தலைவன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jul 07, 2024 07:00 AM IST

விளையாட்டு உலகின் சிறந்த ஐகான், ரோல்மாடல், ஆசான் என பல்வேறு பெருமைகள் கொண்டவராக இருப்பவர் எம்எஸ் தோனி. இந்திய கிரிக்கெட்டின் சிறந்த தலைவனாக பார்க்கப்படும் தோனிக்கு இன்று பிறந்தநாள்

விளையாட்டு உலகின் ஐகான், ரோல்மாடல்,இந்திய கிரிக்கெட்டின் சிறந்த தலைவன்
விளையாட்டு உலகின் ஐகான், ரோல்மாடல்,இந்திய கிரிக்கெட்டின் சிறந்த தலைவன் (PTI)

விளையாட்டு உலகில் சிறந்த ஐகான், ரோல்மாடல், ஆசான் என பல்வேறு பெருமைகள் கொண்டவராக இருப்பவர் தோனி. பொதுவாக விளையாட்டு என்றாலே வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரண்டில் ஒன்றில் முடிந்து போகும் விஷயம்தான். 

ஆனால் அதையும் கடந்த அதில் படிப்பினைகளையும், பாடங்களையும், போராட்டங்களையும், நுணுக்கங்களையும் என பல்வேறு விஷயங்களையும் இளம் தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்த வல்லவராக இருப்பதால் தான் அவரை ஒரு தலைவனாகவே பலரும் பார்க்கிறார்கள். 

தோனியின் தாரக மந்திரங்கள்

வாய்ப்பை முழுவதுமாக பயன்படுத்து, கடைசி வரை போராடு, உனக்கான தருணத்துக்காக காத்திரு, அடிப்படையை மறக்காதே, மாத்தியோசி போன்ற விஷயங்கள் தோனியின் தாரக மந்திரமாக இருந்துள்ளன. இதுவே களத்தில் அவரை தனித்து காட்டியதுடன். வெற்றி பாதைக்கும் அழைத்து சென்றுள்ளது.

கேப்டன் கூல் என்று அழைக்கப்பட்ட இவர், நெருக்கடி தருணத்திலும் தனது பொறுமையை இழக்காமல், கோபத்தை வெளிப்படுத்தாதவராகவும் களத்தில் இருந்து வந்துள்ளார். வெற்றிக்கான பங்களிப்பை எப்போதும் அணியினர் தோல்களிலும்,  தோல்விகான சுமையை தனது தோல்களிலும் சுமந்து செல்லும் தலைமைத்துவ பண்பைவை இந்த தலைமுறை விளையாட்டு வீரர்களக்கு கற்று கொடுத்தவராக உள்ளார்.

தோனியின் சில முக்கிய சாதனைகள்

வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மூன்று ஐசிசி தொடர்களையும் வென்ற கேப்டனாக உள்ளார்

டி20 உலகக் கோப்பை, 2011 ஒரு நாள் கிரிக்கெட் தொடர், 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடர் என ஐசிசி நடத்திய மூன்று வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடர்களையும் வென்ற கேப்டன் தோனி

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் வீழ்த்திய சாதனை தோனி வசம் உள்ளது

350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் தோனி 123 ஸ்டம்பிங் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்

இதுவரை 247 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனி 42 ஸ்டம்பிங் வீழ்த்தி முதல் இடத்தை பிடித்துள்ளார். மொத்தம் 180 விக்கெட்டுகள் வீழ்த்த காரணமாக இருந்துள்ளார்.

ஐசிசி தரவரிசையில் மிகவும் குறைவான இன்னிங்ஸில் பங்கேற்று முதல் இடத்தை பிடித்த வீரர் என்ற சாதனையை தோனி நிகழ்த்தியுள்ளார்

பேட்ஸ்மேன்களை பொறுத்தவரை தனது 38வது இன்னிங்ஸில் தோனி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறினார்.

மின்னல் வேக ஸ்டம்பிங் செய்வதில் கில்லியாக இருந்த தோனி 0.08 விநாடிகளில் ஸ்டம்பிங் செய்தவர் என்ற தனித்துவமான சாதனை தன் வசம் வைத்துள்ளார்

ஐபிஎல் சாதனைகள்

ஐபிஎல் போட்டிகளில் அதிக ஆட்டங்கள் கேப்டனாக செயல்பட்டவராக உள்ளார்

ஐபிஎல் தொடங்கி 2008 முதல் 2023 வரை அனைத்து சீசன்களிலும் விளையாடியுள்ள தோனி, 226 போட்டிகள் கேப்டனாக இருந்துள்ளார். இதுவே ஒரு வீரர் அதிகமாக கேப்டன்சி செய்ததாகும்.

ஐபிஎல் போட்டிகளிலும் அதிக ஸ்டம்பிங் வீழ்த்திய வீரராக தோனி இருக்கிறார்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.