HBD Neetu David: 15 ஆண்டுகள் ஆகியும் முறியடிக்க முடியாத சாதனைக்கு சொந்தக்காரர்! இந்திய மகளிர் அணியின் தரமான ஸ்பின்னர்
இந்திய மகளிர் கிரிக்கெட்டில் நீது டேவிட் நிகழ்த்தியிருக்கும் சாதனை, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்ற 15 ஆண்டுகள் ஆன பிறகும் இன்று வரையில் நீடித்து வருகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் 1995 முதல் 2008 வரை டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அணியின் முக்கிய ஸ்பின் பவுலராக ஜொலித்தவர் நீது டேவிட். உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்த்தவரான இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் உத்தரபிரதேசம், ரயில்வேஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
1995இல் நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் அறிமுகமானார். ஸ்லோ இடது கை ஆர்தோடாக்ஸ் பவுலரான இவர், அற்புதமான சுழற்பந்து வீச்சு மூலம் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரும் பவுலராக இருந்து வந்துள்ளார். 10 டெஸ்ட் போட்டிகளில் 41 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் நீது டேவிட், சிறந்த பவுலங்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 53 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியதாகும். துர்தஷ்டவசமாக இந்தியா இந்தப் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பவுலிங் போட்டி தோல்வியில் முடிந்ததாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் மொத்தம் 9 விக்கெட்டுகளை எடுத்தார் நீது டேவிட்.
அத்துடன் இந்திய மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீது டேவிட் எடுத்த 8/53, இப்போது வரையிலும் சிறந்த பவுலிங்காக இருந்து வருகிறது. டெஸ்ட் போட்டி போல் ஒரு நாள் கிரிக்கெட்டிலும் சிறப்பான பவுலராகவே கலக்கியுள்ளார் நீது டேவிட்.
இந்திய மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலர் என்ற பெருமை இவருக்குதான் உள்ளது. 97 ஒரு நாள் போட்டிகளில் 141 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் லில்டில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் இவர் வீழ்த்திய 32 விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் அவுட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக முறை ஸ்டம்பிங் மூலம விக்கெட் எடுத்த பவுலர் என்ற சாதனை இவர் வசமே உள்ளது.
2006இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து பின்னர் யூடர்ன் எடுத்த நீது டேவிட், தொடர்ந்து 2008இல் மகளிருக்கான ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றார். உலக பேட்ஸ்மேன்களை அற்புதமான சுழற்பந்து வீச்சால் அச்சுறுத்தியவரும், தற்போது இந்திய மகளிர் அணியில் தேர்வு குழுவில் ஒருவராக இருந்து வரும் நீது டேவிட் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்