தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ind W Vs Sa W: மந்தனா, ஹர்மன்ப்ரீத் அதிரடி பார்ட்னர்ஷிப்! மொத்தம் நான்கு சதங்கள் - தொடரை வென்ற இந்தியா மகளிர்

IND W vs SA W: மந்தனா, ஹர்மன்ப்ரீத் அதிரடி பார்ட்னர்ஷிப்! மொத்தம் நான்கு சதங்கள் - தொடரை வென்ற இந்தியா மகளிர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 19, 2024 11:25 PM IST

மந்தனா, ஹர்மன்ப்ரீத் அதிரடி பார்ட்னர்ஷிப்பை வெளிப்படுத்தி 171 ரன்கள் சேர்த்தனர். இந்தியா மகளிர் - தென் ஆப்பரிக்கா மகளிர் இடையிலான இந்த போட்டியில் மொத்தம் நான்கு சதங்கள் விளாசப்பட்டன. அத்துடன் இரண்டு வெற்றிகளுடம் தொடரை வென்றது இந்தியா மகளிர்.

மந்தனா, ஹர்மன்ப்ரீத் அதிரடி பார்ட்னர்ஷிப்பால் தொடரை வென்ற இந்தியா
மந்தனா, ஹர்மன்ப்ரீத் அதிரடி பார்ட்னர்ஷிப்பால் தொடரை வென்ற இந்தியா (BCCIWomen - X)

இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் தென் ஆப்பரிக்கா மகளிர் அணி, இந்திய மகளிர் அணிக்கு எதிராக ஒரு நாள், டெஸ்ட், டி20 என மூன்று வகை போட்டிகளில் விளையாடுகிறது. இதையடுத்து முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றியை பெற்றது.

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.