IND vs SL: தொடங்கிய வேகத்தில் முடிந்த ஆட்டம்.. இலங்கை 50 ரன்களில் சுருண்டது
Asia Cup 2023: இலங்கை அணி 50 ரன்களில் ஆல் அவுட்டானது.
இந்திய அணியின் முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் பும்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்களில் சுருண்டது. இந்தியா 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடவுள்ளது.
மழை காரணமாக போட்டி திட்டமிட்டப்படி 3 மணிக்குத் தொடங்காமல் 3.40 மணிக்கு தொடங்கியது. முதல் ஓவரிலேயே பும்ரா ஒரு விக்கெட்டை சாய்த்தார். குசால் பெரோரா கேட்ச் ஆகி நடையைக் கட்டினார். பின்னர் அடுத்த ஓவரில் முகமது சிராஜ் வீசிய பந்தை அடிக்க முயன்ற நிசாங்கா ஜடேஜாவிடம் கேட்ச் ஆனார்.
4வது ஓவரை சிராஜ் வீசினார். ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பதும் நிசாங்கா 2 ரன்களிலும், குசால் பெரேரா ரன்கள் இன்றியும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சதீரா, சரித் அசலங்கா ஆகியோர் டக் அவுட்டாகினர்.
தனஞ்செய டி சில்வா 4 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். தற்போது குசால் மெண்டிஸும், கேப்டன் ஷனகாவும் விளையாடினர்.
அடுத்து ஓவரில் ஷனகாவின் விக்கெட்டையும் சாய்த்தார் சிராஜ். இதன்மூலம், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இத்தனை விக்கெட்டுகளை சாய்த்த வீரர் ஆனார் சிராஜ்.
இவ்வாறாக சிராஜ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
இலங்கை அணியில் அதிகபட்சமாக குசால் மென்டிஸ் மட்டுமே 17 ரன்கள் எடுத்தார். அடுத்தபடியாக ஹேமந்தா 13 ரன்களை எடுத்தார். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்துடன் பெவிலியன் சென்றனர்.
இவ்வாறாக இலங்கை அணி 15.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. 51 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி பெறும் என்ற நிலையில் நமது அணி விளையாடவுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்