IND vs SL Result: இந்தியா சாம்பியன்.. 8 வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது!
Asia Cup 2023 Champion: 2022 இல் நடந்த 20 ஓவர் ஆசிய கோப்பையை இலங்கை வென்றிருந்தது. அதற்கு முன் 2018இல் நடந்த ஒரு நாள் ஆசிய கோப்பையை இந்தியா வென்றிருந்தது. அதன்படி ஒரு நாள் கோப்பையை மீண்டும் தக்க வைத்துள்ளது இந்தியா.
இந்திய அணி எளிமையான இலக்கான 51 ரன்களை எட்டி ஆசிய கோப்பையை எட்டாவது முறையாக வென்றது. இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2022 இல் நடந்த 20 ஓவர் ஆசிய கோப்பையை இலங்கை வென்றிருந்தது. அதற்கு முன் 2018இல் நடந்த ஒரு நாள் ஆசிய கோப்பையை இந்தியா வென்றிருந்தது. அதன்படி ஒரு நாள் கோப்பையை மீண்டும் தக்க வைத்துள்ளது இந்தியா.
டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. மழை காரணமாக 3 மணிக்கு தொடங்காமல், 3.40 மணிக்கு போட்டி தொடங்கியது. ஆனால், இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. முதல் ஓவரிலேயே பும்ரா ஒரு விக்கெட்டை எடுத்தார். குசால் பெரேரா டக் அவுட்டானார்.
இதையடுத்து, அடுத்த ஓவரை முகமது சிராஜ் வீசி ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து பும்ராவும், சிராஜும் மாறி மாறி பந்துவீசினர்.
4வது ஓவரை சிராஜ் வீசி, 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பதும் நிசாங்கா, சமரவிக்ரமா, அசலங்கா, தனஞ்செய டி சில்வா என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்தார் சிராஜ்.
பின்னர் 6வது ஓவரில் கேப்டன் ஷனகா விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம், அதிவேகமாக 6 விக்கெட்டுகளை எடுத்த பவுலர் என்ற சாதனையைப் படைத்தார். அதாவது 16 பந்துகளில் 6 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார் சிராஜ். இதில் இரண்டு விக்கெட் போல்டு என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளை தூக்கினார்.
இவ்வாறாக 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்களை எடுத்தது இலங்கை. 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா விளையாடியது.
எளிதாக இலக்கை எட்டியது. இஷான் கிஷன், ஷுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடி காண்பித்தனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்