India vs SL: 5 விக்கெட்டை சாய்த்த சிராஜ்.. இலங்கை தடுமாற்றம்
இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
மழை காரணமாக 3.40 மணிக்கு இந்தியா, இலங்கை இடையிலான ஆட்டம் தெடாங்கியது. முதல் ஓவரை பும்ரா வீசினார். 7 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அடுத்த ஓவரை முகமது சிராஜ் வீசினார்.
அந்த ஓவரில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து பும்ரா மீண்டும் ஒரு ஓவரை வீச, பின்னர் 4வது ஓவரை சிராஜ் வீசினார். ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பதும் நிசாங்கா 2 ரன்களிலும், குசால் பெரேரா ரன்கள் இன்றியும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சதீரா, சரித் அசலங்கா ஆகியோர் டக் அவுட்டாகினர்.
தனஞ்செய டி சில்வா 4 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். தற்போது குசால் மெண்டிஸும், கேப்டன் ஷனகாவும் விளையாடினர்.
அடுத்து ஓவரில் ஷனகாவின் விக்கெட்டையும் சாய்த்தார் சிராஜ். இதன்மூலம், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இத்தனை விக்கெட்டுகளை சாய்த்த வீரர் ஆனார் சிராஜ்.
ஆசிய கோப்பை 2023 போட்டித் தொடரில் இந்தியா, வங்கதேசத்திற்கு எதிரான ஓர் ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. மற்ற அனைத்து ஆட்டங்களிலும் ஜெயித்தது.
இப்போட்டியில் இரு அணிகளும் அபாரமான ஃபார்மில் இருப்பதால் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளன. இந்த போட்டியின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்ததை அடுத்து இந்திய அணி களமிறங்குகிறது. மறுபுறம், இலங்கை தனது கடைசி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆசிய கோப்பை 2023 போட்டித் தொடரில் இந்தியா, வங்கதேசத்திற்கு எதிரான ஓர் ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. மற்ற அனைத்து ஆட்டங்களிலும் ஜெயித்தது.
இலங்கையும் இதேபோல் தான். இந்தியாவுக்கு எதிரான ஓர் ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. மற்ற அனைத்து ஆட்டங்களிலும் ஜெயித்து வெற்றிகரமான அணியாக பைனலுக்கு முன்னேறியிருக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான போட்டி கட்டாயம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் கோலி, பும்ரா ஆகியோருக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டது. இன்றைய ஆட்டத்துக்கு அவர் நிச்சயம் திரும்புவார்.
இலங்கை அணி பக்கா பார்மில் இருப்பதால் இந்தியா கூடுதல் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பிடித்துள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்