India vs Sri Lanka: சுட சுட வந்த சூப்பர் ஓவர்.. தட்டுத்தடுமாறிய இலங்கை! - த்ரில் வெற்றி பெற்ற இந்தியா!
India vs Sri Lanka: ஓப்பனராக களமிறங்கிய சுப்மன் கில் ஓரளவுக்கு நிதானமாக ஆடினார். 10 ரன்னில் ஜெய்ஸ்வால் பெவிலியனுக்கு நடையைக்கட்ட, சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். -த்ரில் வெற்றி பெற்ற இந்தியா!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது போட்டியில் வெற்றியை தன்வசப்படுத்திய இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து, தொடரை கைப்பற்றி இருந்தது.
3-வது டி20 கிரிக்கெட் போட்டி
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. அதன் படி, இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. ஓப்பனராக களமிறங்கிய சுப்மன் கில் ஓரளவுக்கு நிதானமாக ஆடினார். 10 ரன்னில் ஜெய்ஸ்வால் பெவிலியனுக்கு நடையைக்கட்ட, சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.
தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிபம் துபே 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, வெறும் 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. சுப்மல் கில் -ரியான் பராக் ஜோடி 54 ரன்கள் சேர்த்த நிலையில், சுப்மன் கில் 39 ரன்களில் ஆட்டமிழக்க, பராக் 26 ரன்னில் நடையை கட்ட, சுந்தரோ 25 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்தது.