India vs South Africa: ஆஸி., தொடரை கைப்பற்றிய நம்பிக்கையுடன் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்!
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  India Vs South Africa: ஆஸி., தொடரை கைப்பற்றிய நம்பிக்கையுடன் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்!

India vs South Africa: ஆஸி., தொடரை கைப்பற்றிய நம்பிக்கையுடன் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்!

Manigandan K T HT Tamil
Dec 10, 2023 06:07 PM IST

India vs South Africa 1st T20: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்திருக்கும்.

இந்திய கிரிக்கெட் அணி டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ்
இந்திய கிரிக்கெட் அணி டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் (PTI)

டி20 சர்வதேசப் போட்டிகளில் 2,000 ரன்களை எட்டுவதற்கு சூர்யகுமாருக்கு வெறும் 15 ரன்கள் மட்டுமே தேவை உள்ளது. அதை செய்தால், விராட் கோலியின் சாதனையை சமன் செய்வார், ஏனெனில் இரண்டு பேட்ஸ்மேன்களும் 56 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியிருப்பார்கள்.

மிடில் ஆர்டரில் களமிறங்கும் வீரரான சூர்யகுமார் யாதவ் இந்தச் சாதனையை எட்டுவது மிகவும் சவால் நிறைந்து ஒன்று என்றால் அதை மறுக்க முடியாது. தற்போது, பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் முஹம்மது ரிஸ்வான் ஆகியோர் 52 போட்டிகளில் டி20 போட்டிகளில் அதிவேகமாக 2,000 ரன்களை எட்டிய சாதனையை படைத்துள்ளனர், ஆனால் சூர்யகுமார் யாதவ் இந்த மூன்று பேட்ஸ்மேன்களை விட மிடில் ஆர்டரில் தான் பேட்டிங் செய்து வருகிறார்.

டி20யில் சூர்யகுமார் யாதவின் ரன்களில் 60% மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்து 165 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடியிருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவின் டர்பனில் உள்ள ஹாலிவுட்பெட்ஸ் கிங்ஸ்மீட் ஸ்டேடியம் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 10-ம் தேதி இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவே முதல் போட்டியாகும்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா நேருக்கு நேர் இதுவரை

இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 13ல் இந்தியாவும், 10ல் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்த அணிகளுக்கு இடையேயான கடைசி 5 டி20 போட்டிகளில், இந்தியா 3 மற்றும் தென்னாப்பிரிக்கா 2 இல் வெற்றி பெற்றுள்ளன.

ஸ்கோரை சேஸிங் செய்யும் அணி வெற்றி பெறும் என கூறப்படுகிறது. பல இந்திய வீரர்களுக்கு தென்னாப்பிரிக்க சூழ்நிலையில் விளையாடிய அனுபவம் இல்லாததால், தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.