இந்தியா vs தென்னாப்பிரிக்கா.. இன்று கடைசி டி20 மேட்ச், தொடரை கைப்பற்றுமா இந்தியா!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா, நான்காவது டி20ஐ லைவ் ஸ்ட்ரீமிங்: அனைத்து முக்கிய விவரங்களும் இங்கே தரப்பட்டுள்ளது. முழு விவரங்களையும் படிக்கவும்.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெள்ளிக்கிழமை இரவு ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள தி வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3வது டி20யில் திலக் வர்மா அதிரடியாக சதம் விளாசி அசத்தினார்.
முதல் டி20 போட்டியில், சஞ்சு சாம்சன் 107 ரன்கள் எடுத்து இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற உதவினார். இரண்டாவது போட்டியில் இந்திய பேட்டிங் வரிசை 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 3வது டி20 மேட்ச்சில் திலக் வர்மா 107 ரன்களை விளாசினார்.
இருப்பினும், 2வது மேட்ச்சில் தென்னாப்பிரிக்கா வென்றது. தற்போது 2-1 என்ற நிலையில், இந்தியா முன்னிலை வகிக்கிறது. கடைசி டி20 போட்டியில் இரு அணிகளும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதில் அனைத்து கண்களும் உள்ளன.