IND vs SA 2nd t20 Preview: இன்று 2வது டி20 ஆட்டம்-புதிய களத்தில் சவாலை எதிர்கொள்ள காத்திருக்கும் டீம் இந்தியா
IND vs SA: இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ODI, 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாட தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டி20 கிரிக்கெட் Gqeberha நகரில் இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் ஆட்டம் மழை காரணமாக டாஸ் கூட போடாப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
T20 உலகக் கோப்பைக்கு இன்னும் 5 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்திய வீரர்கள் ஆக்ஷனில் இறங்க வேண்டிய நேரம் இது.
எனவே, செவ்வாய்கிழமை Gqeberha தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா தெளிவான வானிலையை எதிர்பார்க்கிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை டி20 கிரிக்கெட்டில் 4-1 என்ற கணக்கில் சமீபத்தில் வீழ்த்தியது.
அதே உத்வேகத்துடன் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டி20 போட்டி பல மொழிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்திய பார்வையாளர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளம் மூலம் போட்டியை நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. டீம் இந்தியா 13 வெற்றிகளுடன் சிறந்த நேருக்கு நேர் (H2H) சாதனையைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா 10 போட்டிகளில் வென்றுள்ளது. இரண்டு போட்டிகள் முடிவு இல்லாமல் முடிவடைந்தன, அவற்றில் ஒன்று சமீபத்தியது.
இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா என பல மூத்த வீரர்கள் இல்லாமல் களமிறங்குகிறது, சூர்ய குமார் யாதவ் அணியை வழிநடத்த உள்ளார். தென்னாப்பிரிக்கா நிலைமைகளில் தங்கள் திறனை வெளிப்படுத்த இளம் வீரர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை எதிர்கொள்ள தென்னாப்பிரிக்கா ஒரு வலிமையான அணியைக் கொண்டுள்ளது. முதல் போட்டியில் வாஷ்அவுட் செய்யப்பட்ட பிறகு, இரு அணிகளுக்கும் இப்போது இரண்டு போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அந்தந்த அணிக்கு கணிசமான பலன் கிடைக்கும்.
டர்பன் இந்தியாவிற்கு பரிட்சயமான மைதானம், ஆனால் Gqeberha புதிய ஒன்று ஆகும். இது எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணிக்கு ஒரு பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்பதால் பொறுத்திருந்து பார்ப்போம்.