India vs South Africa 1st T20I: டர்பனில் மழை பெய்ய வாய்ப்பா.. இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்?
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா 1வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை டர்பனில் இன்று எதிர்கொள்கிறது இந்தியா.
தென்னாப்பிரிக்காவின் டர்பனில் உள்ள ஹாலிவுட்பெட்ஸ் கிங்ஸ்மீட் ஸ்டேடியம் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 10-ம் தேதி இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவே முதல் போட்டியாகும்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா நேருக்கு நேர் இதுவரை
இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 13ல் இந்தியாவும், 10ல் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்த அணிகளுக்கு இடையேயான கடைசி 5 டி20 போட்டிகளில், இந்தியா 3 மற்றும் தென்னாப்பிரிக்கா 2 இல் வெற்றி பெற்றுள்ளன.
இந்த மைதானத்தில் இந்தியா சிறப்பான டி20 சாதனை படைத்துள்ளது. மென் இன் ப்ளூ இங்கு இதுவரை 5 T20I போட்டிகளில் விளையாடியுள்ளது, அவற்றில் எதையும் இன்னும் இழக்கவில்லை. ஒட்டுமொத்தமாக, இந்த மைதானத்தில் இதுவரை 18 டி20 போட்டிகள் நடந்துள்ளன; முதலில் பேட்டிங் செய்த 8 அணிகளும், சேசிங் செய்து 8 அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமநிலையில் இருந்த நிலையில் ஒரு போட்டியில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
வானிலை எப்படி இருக்கும்?
Weather.com படி, இன்று டர்பனில் காலை மற்றும் பிற்பகல் நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு 55% வரை உள்ளது. இருப்பினும் மாலை 4 மணிக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பில்லை. ஈரப்பதம் 83% அதிகமாக இருக்கும். நாள் முழுவதும் வெப்பநிலை சுமார் 18-21 டிகிரி இருக்கும்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா கணிப்பு
கூகுளின் வெற்றி நிகழ்தகவின்படி, இந்தியா வெற்றிபெற 54% வாய்ப்பு உள்ளது.
ஸ்கோரை சேஸிங் செய்யும் அணி வெற்றி பெறும் என கூறப்படுகிறது. பல இந்திய வீரர்களுக்கு தென்னாப்பிரிக்க சூழ்நிலையில் விளையாடிய அனுபவம் இல்லாததால், தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.