Ind vs Nz Semi Final Live Updates: முகமது ஷமி 7 விக்கெட்டுகள் - நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்த இந்தியா
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Nz Semi Final Live Updates: முகமது ஷமி 7 விக்கெட்டுகள் - நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்த இந்தியா

Ind vs Nz Semi Final Live Updates: முகமது ஷமி 7 விக்கெட்டுகள் - நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்த இந்தியா

HT Tamil Desk HT Tamil
Nov 15, 2023 10:58 PM IST

nd vs Nz Semi Final Live Updates: இறுதிப் போட்டிக்கு போகப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் இன்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் அப்போட்டியின் அனைத்து அப்டேட்டுகளையும் இங்கு உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Ind vs Nz Semi CWC Final Live Updates: இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இன்றைய உலகக்கோப்பை அரையிறுதி போட்டியின் அப்டேட்ஸ் இங்கு காணலாம்.
Ind vs Nz Semi CWC Final Live Updates: இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இன்றைய உலகக்கோப்பை அரையிறுதி போட்டியின் அப்டேட்ஸ் இங்கு காணலாம்.

இந்தியா வெற்றி

Ind vs Nz Semi CWC Final Live Updates: 48.5 ஓவரில் நியூசிலாந்து 327 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சதமடித்த மிட்செல் விக்கெட்டை தூக்கிய ஷமி

Ind vs Nz Semi CWC Final Live Updates: முகமது ஷமி ஓவரில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவுட்டானார் 134 ரன்கள் எடுத்து அவுட்டானார் டேரில் மிட்செல்.  உலகக் கோப்பை 2023 தொடரில் மூன்றாவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் முகமது  ஷமி

சாப்மேனை விக்கெட்டை தூக்கிய குல்தீப்

Ind vs Nz Semi CWC Final Live Updates: நியூசிலாந்து அதிரடி பேட்ஸ்மேனான சாம்பமேன் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவரது விக்கெட்டை தூக்கினார் குல்தீப் யாதவ்

பிளிப்ஸ் அவுட்

Ind vs Nz Semi CWC Final Live Updates: அதிரடியாக பேட் செய்து வந்த க்ளென் பிளிப்ஸ் 33 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவுட்டானார். பவுண்டரி அருவகே இவரது கேட்சை பிடித்தார் ஜடேஜா

40 ஓவரில் 266 ரன்கள் 

Ind vs Nz Semi CWC Final Live Updates: நியூசிலாந்து அணி 40 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி 10 ஓவரில் நியூசிலாந்துக்கு 132 ரன்கள் தேவைப்படுகிறது

சதமடித்த மிட்செல்

Ind vs Nz Semi CWC Final Live Updates: அதிரடியாக பேட் செய்து  ரன்குவிப்பில் ஈடுபட்டு வரும் டேரில் மிட்செல் சதமடித்தார். 35 ஓவரில் நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது

அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை தூக்கிய ஷமி

Ind vs Nz Semi CWC Final Live Updates: சிறப்பாக பேட் செய்து வந்த கேன் வில்லியம்சன் விக்கெட்டை தூக்கினார் முகமது ஷமி. 69 ரன்கள் எடுத்து அவர் அவுட்டனார். இவரை தொடர்ந்து டாம் லாதமையும் டக் அவுட்டாக்கி பெவிலியன் அனுப்பினார்.

30 ஓவரில் 199 ரன்கள்

Ind vs Nz Semi CWC Final Live Updates: நியூசிலாந்து அணி 30 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் 90, வில்லியம்சன் 58 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்

அரைசதத்தை பூர்த்தி செய்த வில்லியம்சன்- மிட்செல்

Ind vs Nz Semi CWC Final Live Updates: சிறப்பாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டு வரும் கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் ஆகியோர் அரைசதத்தை பூர்த்தி செய்து விளையாடி வருகின்றனர். 27 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் 51, மிட்செல் 72 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள் 

பார்ட்னர்ஷிப் அமைக்கும் வில்லியம்சன் - மிட்செல்

Ind vs Nz Semi CWC Final Live Updates: 7.4 ஓவர்களில் 39 ரன்களுக்கு முதல் 2 விக்கெட்டை நியூசிலாந்து அணி இழந்த நிலையில், 20 ஓவர் முடிவில் மேற்கொண்டு விக்கெட் இழக்காமல் 124  ரன்கள் எடுத்துள்ளார். மூன்றாவது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் - டேரில் மிட்செல் என இருவரும் இணைந்து 85 ரன்கள் எடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர்.

பவர்ப்ளே முடிவில் இந்தியா ஆதிக்கம்

Ind vs Nz Semi CWC Final Live Updates: பிரதான பவர் ப்ளே முடிவில் நியூசிலாந்து  2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது, அந்த அணியின் ஓபனர்கள் கான்வே 13, ரவீந்திரா 13 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். இந்த இருவரையும் முகமது ஷமி அவுட்டாக்கினார்.

இரண்டாவது விக்கெட்டை வீழ்த்திய ஷமி

Ind vs Nz Semi CWC Final Live Updates: முதல் ஓவரில் கான்வே விக்கெட்டை தூக்கிய முகமது ஷமி, தனது இரண்டாவது ஓவரில் பார்மில் இருக்கும் ரச்சின்  ரவீந்திரா விக்கெட்டை தூக்கினார். 13 ரன்களில் ரவீந்திரா அவுட்டாகி வெளியேறினார்

கான்வே அவுட்

Ind vs Nz Semi CWC Final Live Updates: முகமது ஷமி தனது முதல் ஓவரின் முதல் பந்திலேயே கான்வே விக்கெட்டை தூக்கினார். அப்போது நியூசிலாந்து ஸ்கார் 5.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்துள்ளது

நியூசிலாந்துக்கு 398 ரன்கள் இலக்கு

Ind vs Nz Semi CWC Final Live Updates: உலகக் கோப்பை 2023 தொடரில்  நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்துள்ளது.
 

ஷ்ரேயாஸ் ஐயர் சதம்

Ind vs Nz Semi CWC Final Live Updates: விராட் கோலியை தொடர்ந்து ஆட்டத்தின் 47.2 ஓவரில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் 67 பந்துகளில் சதமடித்துள்ளார். அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் என உள்ளது.

50வது சதமடித்த கோலி

Ind vs Nz Semi CWC Final Live Updates: ஆட்டத்தின் 41.4 ஓவரில் தனது 50வது சதத்தை பூர்த்தி செய்து சாதனை புரிந்தார் விராட் கோலி. ஒரு நாள் கிரிக்கெட்டில் 50வது சதத்தை அடிக்கும் முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

40 ஓவரில் இந்தியா 287 ரன்கள்

Ind vs Nz Semi CWC Final Live Updates: 40 ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 95, ஷ்ரேயாஸ் 61 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

100 ரன்கள் பார்டனர்ஷிப்

Ind vs Nz Semi CWC Final Live Updates:  கோலி - ஷ்ரேயாஸ் இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். 36 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு இந்தியா 265 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 86, ஷ்ரேயாஸ் 49 ரன்களுடன் விளையாடி வருகின்றனர் 

இந்தியா 200 ரன்கள்

Ind vs Nz Semi CWC Final Live Updates: இந்தியா 28.1 ஓவரில் 200 ரன்களை கடந்துள்ளது. கோலி 56, ஷ்ரேயாஸ் 15 ரன்களுடன் களத்தில் விளையாடி வருகின்றனர்

25 ஓவர் முடிவில் இந்தியா 178 ரன்கள்

Ind vs Nz Semi CWC Final Live Updates: 20 ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 178 ரன்கல் எடுத்துள்ளது. கோலி 45, ஷ்ரேயாஸ் 4 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

Retiered Hurtஆன கில்

Ind vs Nz Semi CWC Final Live Updates: ஆட்டத்தின் 22.4 ஓவரின்போது தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்ட சுப்மன் கில், Retiered Hurt ஆகி பாதியிலேயே களத்தை விட்டு வெளியேறினார். கில் வெளியேறிய நிலையில் ஷ்ரேயாஸ் பேட் செய்ய களமிறங்கியுள்ளார்

20 ஓவரில் 150 ரன்கள்

Ind vs Nz Semi CWC Final Live Updates: 20 ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. கில் 74, கோலி 26 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்

கில் அரைசதம்

Ind vs Nz Semi CWC Final Live Updates: ஆட்டத்தின் 13.3 ஓவரில் சுப்மன் கில் 41 பந்தில் அரைசதம் அடித்துள்ளார். உலகக் கோப்பை 2023 தொடரில் அவர் நான்காவது அரைசதம் அடித்துள்ளார்

12.2 ஓவரில் 100 ரன்கள்

Ind vs Nz Semi CWC Final Live Updates: இந்திய அணி 12. 2 ஓவரில் 102 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 38 பந்துகளில் 48 ரன்கள் அடித்துள்ளார்.  கோலி 4 ரன்களுடன் விளையாடி வருகிறார் 

பவர்ப்ளே முடிவில் இந்தியா 84 ரன்கள்

Ind vs Nz Semi CWC Final Live Updates: பிரதான பவர் ப்ளே முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.  கில் 30, கோலி 4 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

ரோஹித் ஷர்மா அவுட்

Ind vs Nz Semi CWC Final Live Updates: 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் ஷர்மா, டிம் செளத்தி பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று அவுட்டானார். டிம் செளத்தி பந்தில் ஆறாவது முறையாக ரோஹித் ஷர்மா அவுட்டாகியுள்ளார்.

5.2 ஓவரில் இந்தியா 51 ரன்கள்

Ind vs Nz Semi CWC Final Live Updates: இந்தியா 5.2 ஓவரில் இந்தியா 51 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா அதிரடி காட்டி 19 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார

ரோஹித் ஷர்மா 50 சிக்ஸர்கள்

Ind vs Nz Semi CWC Final Live Updates: உலகக் கோப்பை போட்டிகளில் 50 சிக்ஸரை பறக்க விட்ட முதல் வீரர் என்ற சாதனை புரிந்துள்ளார். உலகக் கோப்பை 2023 தொடரில் மட்டும் 27 சிக்ஸர்களை அடித்துள்ளார். 

முதல் ஓவரில் 10 ரன்கள்

Ind vs Nz Semi CWC Final Live Updates: இந்திய அணி முதல் ஓவரில் 10 ரன்கள் அடித்துள்ளது.  ரோஹித் ஷர்மா 2 பவுண்டரிகளை அடித்தார்

இந்தியா பேட்டிங்

Ind vs Nz Semi CWC Final Live Updates: உலகக் கோப்பை 2023 முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

மழை பெய்தால் என்ன நடக்கும்?

Ind vs Nz Semi CWC Final Live Updates: உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வென்று பைனலுக்கு முன்னேற இந்திய அணி காத்திருக்கிறது. இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை. ஒருவேளை மழை பெய்து அரையிறுதியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் ரிசர்வ் டே உண்டு. முதல் நாள் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து போட்டி தொடர்ந்து நடக்கும். ரிசர்வ் டேயும் ரத்தானால் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணி வென்றதாக அறிவிக்கப்படும்.

அரையிறுதி போட்டி நடக்குமா? - செல்போன் மிரட்டலால் பரபரப்பு

Ind vs Nz Semi CWC Final Live Updates: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியின் போது, வான்கடே மைதானத்தில் பயங்கரமான சம்பவம் ஒன்று நடத்தப்படும் என அடையாளம் தெரியாத நபரிடமிருந்து மும்பை காவல்துறைக்கு மிரட்டல் வந்துள்ளது.

கதறவிடும் பும்ரா

Ind vs Nz Semi CWC Final Live Updates: இந்திய பந்துவீச்சாளர் 9 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த சீசனில் ஜஸ்பிரித் பும்ராவின் சிறந்த பந்துவீச்சாக 4/39 மற்றும் அவர் சராசரியாக 15.64 ஆக இருக்கிறது.

மிரட்டும் ரச்சின் ரவீந்திரா

Ind vs Nz Semi CWC Final Live Updates: நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா 9 போட்டிகளில் 565 ரன்களை குவித்துள்ளார், மேலும் இந்த எடிஷனில் நியூசிலாந்து அணியில் அதிக ரன் எடுத்தவர் ஆவார். அவர் ஸ்டிரைக் ரேட் 108.45 மற்றும் சராசரி 70.63. அவர் இரண்டு அரை சதங்கள் மற்றும் மூன்று சதங்களை விளாசியிருக்கிறார்.

நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி

Ind vs Nz Semi CWC Final Live Updates: இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் ஒன்பது போட்டிகளில் 99 சராசரி மற்றும் 88.52 ஸ்ட்ரைக் ரேட்டில் 594 ரன்கள் குவித்துள்ளார். அவர் ஐந்து அரை சதங்கள் மற்றும் இரண்டு சதங்களை அடித்து, அதிகபட்சமாக 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வானிலை அறிக்கை

Ind vs Nz Semi CWC Final Live Updates: வான்கடே மைதானத்தில் 49 சதவீத ஈரப்பதத்துடன் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மழைக்கு வாய்ப்பு குறைவு தான்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகம்

Ind vs Nz Semi CWC Final Live Updates: இந்த மைதானத்தில் மொத்த விக்கெட்டுகளில் 83% வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்துள்ளனர். எனவே வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு நல்ல யோசனையாக இருக்கும்.

இரண்டாவது பேட்டிங் எடுத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம்

Ind vs Nz Semi CWC Final Live Updates: மைதானத்தில் முதலில் பீல்டிங் பரிந்துரைக்கப்படுகிறது, இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி அதன் 60 சதவீத போட்டிகளில் வெற்றி பெறும்.

மைதானம் எப்படி?

Ind vs Nz Semi CWC Final Live Updates: மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள ஆடுகளம் சமநிலையான டிராக் என்பதால் போட்டி முழுவதும் அப்படியே இருக்கும். இந்த மைதானத்தில் கடந்த 10 போட்டிகளில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 318 ஆகும்.

நியூசிலாந்தின் ரோலர் கோஸ்டர் பயணம்

Ind vs Nz Semi CWC Final Live Updates: நியூசிலாந்து போட்டியில் ஒரு ரோலர்கோஸ்டர் பயணத்தை அனுபவித்தது. சிறப்பான தொடக்கம் இருந்தபோதிலும், தொடர்ந்து நான்கு தோல்விகளுடன் பின்னடைவை சந்தித்தனர். எவ்வாறாயினும், கேன் வில்லியம்சன் தலைமையிலான அணி, இலங்கைக்கு எதிரான கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று, அரையிறுதியில் இடம் பிடித்தது.

சமநிலையில் அணிகள் 

Ind vs Nz Semi CWC Final Live Updates: இப்போட்டியில் ஒன்பது வெற்றிகளுடன் இந்தியா லீக் சுற்றை நிறைவு செய்தது. ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணியானது, அவர்களின் ஆட்டத்தின் அனைத்து அம்சங்களும் உயர் மட்டத்தில் செயல்படுவதால், நன்கு சமநிலையுடன் காணப்படுகிறது.

எத்தனை மணிக்கு ஆட்டம் தொடங்கும்?

Ind vs Nz Semi CWC Final Live Updates: இந்த ஆட்டம் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கப்படும். பிற்பகல் 1.30 மணிக்கு டாஸ் போடப்படும்.

பதிலடி கொடுக்கும் நேரம் இது

Ind vs Nz Semi CWC Final Live Updates: நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளில் நான்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் நேரம் இதுவே என ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

மாறுமா வரலாறு?

Ind vs Nz Semi CWC Final Live Updates: அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோற்கும் என்கிற மோசமான வரலாற்றை, இன்று இந்தியா மாற்றி எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடருமா இந்தியாவின் சாதனை!

Ind vs Nz Semi CWC Final Live Updates: இந்த உலகக்கோப்பைத் தொடரில், ஒரு தோல்வியை கூட சந்திக்காத இந்திய அணியின் வெற்றி பயணம், இன்று தொடருமா என்பதை பார்க்க வேண்டும். 

இறுதிப் போட்டியில் யார்?

Ind vs Nz Semi CWC Final Live Updates: இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும், இன்றைய அரையிறுதி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் பங்கேற்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.