தமிழ் செய்திகள்  /  Cricket  /  India Vs England 5th Test Day 1 And Rohit Past Fifty And Gill Solid As India Reach 135/1 At Stumps

Ind vs Eng: முதல் நாள் முடிவு: 218க்கு இங்கிலாந்து ஆல் அவுட்- ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்களுடன் நிற்கும் இந்தியா

Marimuthu M HT Tamil
Mar 07, 2024 05:43 PM IST

கிரிக்கெட்: இந்தியா Vs இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது, தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சலப் பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் அரங்கில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்தின் டாம் ஹார்ட்லி மற்றும் இந்தியாவின் சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தை

கிரிக்கெட்: இந்தியா Vs இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட், தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சலப் பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் அரங்கில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்தின் டாம் ஹார்ட்லி மற்றும் இந்தியாவின் சுப்மன் கில் அதிரடி
கிரிக்கெட்: இந்தியா Vs இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட், தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சலப் பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் அரங்கில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்தின் டாம் ஹார்ட்லி மற்றும் இந்தியாவின் சுப்மன் கில் அதிரடி (REUTERS)

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து நல்ல தொடக்கத்தை தந்தது. முதல் செஷன் முடிவில் உணவு இடைவேளை வரை, இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்தது. 

இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது செஷன் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தது. இந்த செஷனில் இந்தியாவின் ஸ்பின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் தேநீர் இடைவேளை வரை 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின்னர் மூன்றாவது செஷன் தொடங்கிய அடுத்த 2 ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே எஞ்சிய இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து. இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில், 57.4 ஓவரில் 218 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது, இங்கிலாந்து.

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 30 ஓவர்கள் முடிவில், ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. இந்நிலையில் இந்தியா, முதல் இன்னிங்ஸில், முதல் நாள் ஆட்டநேரமுடிவில் 83 ரன்கள் பின் தங்கியுள்ளது.

அதாவது, முதல் இன்னிங்ஸில் இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணிவீரர் ஜெய்ஸ்வால் மட்டும் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அஸ்வின் - குல்தீப் கலக்கல்:

இந்திய அணியின் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியயோர் மிக துல்லியமாக பந்து வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தந்தனர். இவர்களை அடித்து ஆட முடியாமலும், டிபெண்ட் செய்து சமாளிக்க முடியாமலும் தடுமாறிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் 5, அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டை எடுத்தார். இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் இந்திய ஸ்பின்னர்களே வீழ்த்தினார்கள்.

100 ஆண்டு கால சாதனை முறியடிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் குறைவான பந்துகளை வீசி 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை இந்த போட்டியில் நிகழ்த்தியுள்ளார், இடதுகை ஸ்பின்னரான குல்தீப் யாதவ். 1871 பந்துகள் மட்டுமே வீசி தனது 50வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்துள்ளார். போட்டிகளைப் பொறுத்தவரை மிகவும் குறைவான போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் லிஸ்டில் சுபாஷ் குப்தே, எரபள்ளி பிரசன்னா மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோருடன் இணைந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point