IND vs ENG Toss Report: டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு-இந்தியா பேட்டிங் செய்வது சாதகமா?
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Eng Toss Report: டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு-இந்தியா பேட்டிங் செய்வது சாதகமா?

IND vs ENG Toss Report: டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு-இந்தியா பேட்டிங் செய்வது சாதகமா?

Manigandan K T HT Tamil
Oct 29, 2023 01:43 PM IST

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிராவிட், இந்திய கேப்டன் ரோகித் சர்மா (PTI Photo/Atul Yadav)(PTI10_29_2023_000060A)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிராவிட், இந்திய கேப்டன் ரோகித் சர்மா (PTI Photo/Atul Yadav)(PTI10_29_2023_000060A) (PTI)

டாஸ் வென்ற இங்கிலாந்து, பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, இந்தியா முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

இந்த மைதானத்தில் நடைபெறும் நான்காவது போட்டியாக இது அமைந்துள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டிகளில் ஒன்றாக இந்த போட்டி உள்ளது.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணிக்கு கடைசி வாய்ப்பாக இந்தியாவுக்கு எதிரான இந்தப் போட்டி அமைந்துள்ளது. இதில் வென்றால் உள்ளே, இல்லாவிட்டால் வெளியே என்கிற இக்கட்டான நிலைமையில் அந்த அணி களமிறங்குகிறது.

முதலில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமாகவே கருதப்படுகிறது. ஆனால், ஸ்கோரை அதிகமாக பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.

இங்கிலாந்து அணி தனது 15 வீரர்களையும் களமிறக்கி அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டது. ஆனால் அவர்களுக்கு சாதகமாக எதுவும் அமையவில்லை. இந்தியாவுக்கு எதிராக வெற்றி மட்டுமில்லாமல் இனி எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டில் வென்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என சிறப்பாக செயல்பட்டு முழுமையான அணியாக உள்ளது. அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா காலில் ஏற்பட்ட காயத்தால் இன்றைய போட்டியிலும் விளையாட மாட்டார் என தெரிகிறது. அவரது இடத்தில் இடம்படித்த முகமது ஷமி தனது தேர்வை நியாயப்படுத்தும் விதமாக நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டு எடுத்தார்.

பேட்டிங்கில் ரோஹித், கோலி, கில், கேஎல் ராகுல், பவுலிங்கில் பும்ரா, சிராஜ், குல்தீப், ஜடேஜா ஆகியோர் நல்ல பார்மில் இருந்து வரும் நிலையில், அதை தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி வெற்றி கூட்டணியுடன் இந்தப் போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.

பிட்ச் நிலவரம்

இங்கு நடைபெற்ற மூன்று போட்டிகளில் ஸ்பின்னர்கள் நன்கு ஜொலித்துள்ளனர். இன்றைய போட்டி நடைபெறும் ஆடுகளம் செம்மண் ஆடுகளமாக இருக்கும் எனவும், லேசாக புற்கள் இருக்கும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் ஸ்பின்னர்களுக்கு நன்கு உதவும் என கணிக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.