தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ind Vs Aus Final Match Live Updates: இந்தியாவை வீழ்த்தி ஆறாவது முறையாக உலக சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா

IND vs AUS Final Match Live Updates: இந்தியாவை வீழ்த்தி ஆறாவது முறையாக உலக சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா

HT Tamil Desk HT Tamil
Nov 19, 2023 10:23 PM IST

Ind vs Aus World Cup 2023 live Score: உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் இன்று இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. போட்டியின் ஒவ்வொரு சுவாரஸ்ய நொடிகளையும் இங்கு நீங்கள் நேரலையாக காணலாம்.

Ind vs Aus World Cup 2023 live Score: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் லைவ் ஸ்கோர் அப்டேட்ஸ் இங்கே காணலாம்.
Ind vs Aus World Cup 2023 live Score: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் லைவ் ஸ்கோர் அப்டேட்ஸ் இங்கே காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

ட்ராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தேர்வு

Ind vs Aus World Cup 2023 live Score: சதமடித்த ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்ட ட்ராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 120 பந்துகளில் 137 ரன்களை எடுத்தார் ஹெட்.

ஆறாவது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்

Ind vs Aus World Cup 2023 live Score: இந்தியாவை 6 விக்கெட்  வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறாவது முறையாக உலக சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா.

லபுஸ்சேன் அரைசதம்

Ind vs Aus World Cup 2023 live Score: நங்கூரமிட்டு பேட் செய்ய வந்த மார்னஸ் லபுஸ்சேன் அரைசதமடித்தார். ஆஸ்திரேலியா வெற்றி பெற 60 பந்துகளில் 16 ரன்கள் தேவை 

சதமடித்த ஹெட்

Ind vs Aus World Cup 2023 live Score: சிறப்பாக பேட் செய்து வந்த ட்ராவிஸ் ஹெட், ஆட்டத்தின் 33.5 ஓவரில் சதமடித்தார்

30 ஓவரில் 167 ரன்கள்

Ind vs Aus World Cup 2023 live Score: 30 ஓவரில் 3 விக்கெட இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா அணி. ஹெட் 86, லபுஸ்சேன் 37 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்

ஹெட் அரைசதம் 

Ind vs Aus World Cup 2023 live Score: ஆரம்பத்தில் திணறிய ட்ராவிஸ் ஹெட் பின்னர் ரன்குவிப்பில் ஈடுபட்ட ஆட்டத்தின் 21.2 ஓவரில் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

17 ஓவரில் 93 ரன்கள்

Ind vs Aus World Cup 2023 live Score: ஹெட் - லபுஸ்சேன் நிதானமாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் ஆஸ்திரேலியா 17 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. ஹெட் 40, லபுசேன் 10 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்

பவர்ப்ளே முடிவில் ஆஸ்திரேலியா 60 ரன்கள்

Ind vs Aus World Cup 2023 live Score: பிரதான பவர்ப்ளே முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 வக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்துள்ளது. ஹெட் 19, லபுஸ்டேன் 0 எடுத்து விளையாடி வருகின்றனர்.

ஸ்மித் விக்கெட்டை காலி செய்த பும்ரா

Ind vs Aus World Cup 2023 live Score: அற்புதமான ஸ்லோ பந்து மூலம் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கினார் பும்ரா. 4 ரன் எடுத்த நிலையில் அவர் வெளியேறினார்.

மிட்செல் மார்ஷ் விக்கெட்டை தூக்கிய பும்ரா

Ind vs Aus World Cup 2023 live Score: அதிரடியாக பேட் செய்து வந்த மிட்செல் மார்ஷ் விக்கெட்டை தூக்கினார் பும்ரா. 15 ரன்கள் எடுத்த நிலையில் அவர் கேஎல் ராகுல் வசம் சிக்கினார்

ஷமி முதல் ஓவரில் வார்னர் அவுட்

Ind vs Aus World Cup 2023 live Score: ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை முகமது ஷமி வீசிய நிலையில், வார்னர் 7 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். உலகக் கோப்பை 2023 தொடரில், பந்து வீசிய முதல் ஓவரில் முகமது ஷமி 5வது முறையாக விக்கெட் வீழ்த்தியுள்ளார் 

சூர்யகுமார் யாதவ் அவுட்

Ind vs Aus World Cup 2023 live Score:  நல்ல பின்ஷிங் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் அவுட்டானார். 

8 விக்கெட்டுகளை இழந்த இந்தியா

Ind vs Aus World Cup 2023 live Score: 45 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு இந்தியா 215 ரன்கள் எடுத்துள்ளது

இந்தியா அணியை கரை சேர்த்த கேஎல் ராகுல் அவுட்

Ind vs Aus World Cup 2023 live Score: பொறுமையாக பேட் செய்து அரைசதமடித்து விளையாடி வந்த கேஎல் ராகுல் 66 ரன்கள் எடுத்த நிலையில்  ஸ்டார்க் பந்தில் அவுட்டானார். 

இந்தியா 200 ரன்கள்

Ind vs Aus World Cup 2023 live Score:  இந்தியா 40.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது

40 ஓவரில் 197 ரன்கள்

Ind vs Aus World Cup 2023 live Score: இந்தியா 40 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்துள்ளது.  கேஎல் ராகுல் 64, சூர்யகுமார் யாதவ் 8 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்

ஜடேஜா அவுட்

Ind vs Aus World Cup 2023 live Score: கேஎல் ராகுலுடன்  இணைந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து வந்த ஜடேஜா, ஹசில்வுட் பந்தில் அவுட்டானார். ஜடேஜா 9 ரன்னில் வெளியேறியுள்ளார்.

கேஎல் ராகுல் அரைசதம்

Ind vs Aus World Cup 2023 live Score: பொறுமையாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்த கேஎல் ராகுல், ஆட்டத்தின் 34.5 ஓவரின்போது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இது அவரது 17வது அரைசதமாகும்

32 ஓவரில் 162 ரன்கள்

Ind vs Aus World Cup 2023 live Score: இந்தியா 32 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. கேஎல் ராகுல் 45, ஜடேஜா 5 ரன்களுடன் பேட் செய்து வருகின்றனர்

கம்மின்ஸ் பந்தில் கோலி அவுட்

Ind vs Aus World Cup 2023 live Score: சிறப்பாக போட் செய்து வந்த விராட் கோலி ஆட்டத்தின் 28.3 ஓவரில், கம்மின்ஸ் வீசிய பந்தில் போல்டாகி வெளியேறினார். கோலி 54 ரன்கள் எடுத்தார்.

98 பந்துகளுக்கு பிறகு இந்தியாவுக்கு பவுண்டரி

Ind vs Aus World Cup 2023 live Score: ஆட்டத்தின் 26.2 ஓவரில் ஸ்விப் ஷாட் மூலம் பவுண்டரி அடித்தார் கேஎல் ராகுல். 16.2 ஓவருக்கு பிறகு இந்தியாவுக்கு இந்த பவுண்டரி கிடைத்துள்ளது. 

கோலி அரைசதம்

Ind vs Aus World Cup 2023 live Score: ஆட்டத்தின் 25.1 ஓவரில் விராட் கோலி தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்திய அணியின் ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 132 என உள்ளது 

10 ஓவர்கள் பவுண்டரி இல்லை

Ind vs Aus World Cup 2023 live Score: இந்திய அணியின் கடைசி பவுண்டரி பவர்ப்ளே ஓவரின் கடைசி பந்தில் அடிக்கப்பட்டது. அதன் பின்னர் 20 ஓவர் வரை பவுண்டரி அடிக்கவில்லை

15.4 ஓவரில் 100 ரன்கள்

Ind vs Aus World Cup 2023 live Score: 15 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 34, கேஎல் ராகுல் 9 ரன்களுடன் பேட் செய்து வருகின்றனர்

ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்

Ind vs Aus World Cup 2023 live Score: 4 ரன்கள் அடித்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை தூக்கினார் பேட் கம்மின்ஸ்

மேக்ஸ்வெல் பந்தில் ரோஹித் அவுட்

Ind vs Aus World Cup 2023 live Score: அதிரிடியாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்த் ரோஹித் ஷர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவுட்டானார்

ஹாட்ரிக் பவுண்டரி அடித்த கோலி

Ind vs Aus World Cup 2023 live Score: ஆட்டத்தின் 6வது ஓவரை மிட்செல் ஸ்டார் வீசிய நிலையில், விராட் கோலி முதல் மூன்று பந்தில் பவுண்டரிகளை விரட்டினார்

முதல் விக்கெட்டை வீழ்த்திய ஸ்டார்க்

Ind vs Aus World Cup 2023 live Score: ஆட்டத்தின் 4.2 ஓவரில், சுப்மன் கில் விக்கெட்டை தூக்கினார் மிட்செல் ஸ்டார்க். கில் 4 ரன்கள் அடித்து வெளியேறினார்

சிக்ஸரை பறக்கவிட்ட ரோஹித்

Ind vs Aus World Cup 2023 live Score: ஆட்டத்தின் நான்காவது ஓவரை ஹசில்வுட் வீசிய நிலையில், பேட் செய்த ரோஹித் ஷர்மா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார்.

ஹசில்வுட் முதல் ஓவரில் 2 பவுண்டரிகள்

Ind vs Aus World Cup 2023 live Score: ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை ஹோஷ் ஹசில்வுட் வீசிய நிலையில், இரண்டு பவுண்டரிகளை அடித்தார் ரோஹித் ஷர்மா

முதல் ஓவரில் 3 ரன்கள்

Ind vs Aus World Cup 2023 live Score: ஆட்டத்தின் முதல் ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசிய நிலையில், அந்த ஓவரில் 3 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா 3 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்

வெற்றி கூட்டணியுடன் களமிறங்கும் இரு அணிகள்

Ind vs Aus World Cup 2023 live Score: உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் கடந்த பேட்டியில் விளையாடிய அதே வெற்றி கூட்டணியுடன் களமிறங்குகின்றன.

ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு 

Ind vs Aus World Cup 2023 live Score: உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

நம்பிக்கை தரும் முகமது ஷமி

Ind vs Aus World Cup 2023 live Score: பாண்ட்யா காயத்துக்கு பின்னர் இந்தியா விளையாடிய 5வது போட்டியில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி சிறப்பாக பந்து வீசி 6 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இன்று அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் லிஸ்டில் வாசிம் அக்ரம், லசித் மலிங்கா ஆகியோரை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்துக்கு முன்னேறுவார்.

மூன்றாவது முறையாக வசம் ஆகுமா கோப்பை

Ind vs Aus World Cup 2023 live Score: இந்தியா முதல் உலகக் கோப்பை வென்று 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மூன்றாவது உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது. இந்தி உலகக் கோப்பை தொடர் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஆஸ்திரேலியாவில் வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டார்க் போன்றோருக்கு கடைசி தொடராக இருக்க வாய்ப்பு உள்ளதால் இவர்களின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

2015ஆம் ஆண்டில் நடந்தது என்ன?

Ind vs Aus World Cup 2023 live Score: 2015 உலகக் கோப்பை தொடரிலும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. அத்துடன் 1987 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. இவை எல்லாவற்றுக்கும் சேர்த்து நாக்அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பெற்றிருக்கும் தோல்வி பயனத்துக்கு இந்தியா இன்றுடன் முடிவு கட்டும் என எதிர்பார்க்கலாம்.

பந்து வீச்சு வியூகம்!

Ind vs Aus World Cup 2023 live Score: பந்து வீச்சைப் பொருத்தவரை இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழல் பந்து வீச்சாளர்கள் சகிதம் கடந்த ஆறு போட்டிகளாக களம் கண்டு வெற்றி அடைந்து வருகிறது.

குறைந்த ஸ்கோர் ஆட்டமாக இருக்குமா?

Ind vs Aus World Cup 2023 live Score: வானிலையை பொறுத்தவரை மழை ஆபத்து இல்லை. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளம் தான் இறுதிப்போட்டிக்கும் பயன்படுத்தப்படுகிறது. அந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 191 ரன்னில் சுருட்டி அதை 30.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. இந்திய தரப்பில் ஐந்து பவுலர்கள் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அதற்காக இதுவும் குறைந்த ஸ்கோர் ஆட்டமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

 

20 ஆண்டு பகை! பழித்தீர்க்குமா இந்தியா?

Ind vs Aus World Cup 2023 live Score: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இதற்கு முன் 2003 உலகக் கோப்பை பைனலில் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. சரியாக 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த இரு அணிகளும் உலகக் கோப்பை பைனலில் சந்திக்கின்றன.

8 போட்டிகளில் வெற்றி 

Ind vs Aus World Cup 2023 live Score:ஆஸ்திரேலியா அணி முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வி, இரண்டாவது போட்டியில் தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக தோல்வி என இரண்டு தொடர் தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியிலில் கடைசி இடத்துக்கு சென்று அடுத்து தொடரச்சியாக 8 வெற்றிகளை பெற்று பைனலுக்கு முன்னேறியுள்ளது.

அசைக்க முடியாத அணி

Ind vs Aus World Cup 2023 live Score: இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது முதல் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டன. இதன் பின்னர் தற்போது தொடரின் கடைசி போட்டியில் மீண்டும் சந்திக்கின்றன. இந்தியா அணியை பொறுத்தவரை விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசைக்கமுடியாத அணியாக இருந்து வருகிறது.

சமபலம் பொருந்திய இரு அணிகள்!

Ind vs Aus World Cup 2023 live Score: பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பல்வேறு திருப்பங்களுடன் நடைபெற்றிருக்கும் உலகக் கோப்பை 2023 தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, ஆஸ்திரேலியா என இரு அணிகளும் பலப்பரிட்சை செய்யவுள்ளன. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சமபலம் பொருந்தியதாக இவ்விரு அணிகளும் உள்ளன.

படையெடுக்கும் பிரபலங்கள்

Ind vs Aus World Cup 2023 live Score:பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ், அசாம், மேகாலயா உள்பட் எட்டு மாநிலங்களில் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அனுராக் தாக்கூர், தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வருகை தரவுள்ளார்கள்.

1.30 லட்சம் பார்வையாளர்கள் 

Ind vs Aus World Cup 2023 live Score: உலகக் கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. சுமார் 1.30 லட்சம் பார்வையாளர்கள் நடைபெற இருக்கும் இந்த போட்டியை பல்வேறு பிரபலங்களும் நேரில் காணவுள்ளனர்.

இது பதிலடிக்கான நேரம்

Ind vs Aus World Cup 2023 live Score: 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பைனலில் மோதி கொள்ள இருக்கும் நிலையில், ஏற்கனேவே பெற்ற தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுப்பதற்கான நேரமாக அமைந்துள்ளது.

சவால் விட்டுள்ள ஆஸி.,

Ind vs Aus World Cup 2023 live Score: இன்றைய ஆட்டத்தில் இந்திய ரசிகர்களின் கூச்சலை கட்டுப்படுத்தி, அமைதியாக்குவோம் என்று ஆஸி., கேப்டன் கம்மின்ஸ் சவால் விடுத்துள்ளார். 

தொடர் வேட்டை நடத்துமா இந்தியா

Ind vs Aus World Cup 2023 live Score: இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பெற்ற இந்திய அணி, இறுதிப் போட்டியிலும் வெற்றியை பெற்று உலகக்கோப்பையை வெல்லும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. 

இறுதிப் போட்டியில் இன்று

Ind vs Aus World Cup 2023 live Score: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய இறுதி ஆட்டத்தில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 

IPL_Entry_Point