IND vs AFG 2nd T20I: ‘ஷிவமும் ஜெய்ஸும் சேர்ந்தா மாஸ்’: ஆப்கனுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Afg 2nd T20i: ‘ஷிவமும் ஜெய்ஸும் சேர்ந்தா மாஸ்’: ஆப்கனுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

IND vs AFG 2nd T20I: ‘ஷிவமும் ஜெய்ஸும் சேர்ந்தா மாஸ்’: ஆப்கனுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

Manigandan K T HT Tamil
Jan 14, 2024 10:04 PM IST

India vs Afghanistan: இந்திய அணி முதல் டி20 ஐ போல், 2வது டி20 ஆட்டத்திலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.

அரை சதம் விளாசிய ஷிவம் துபே, ஜெய்ஸ்வால் (AP Photo/ Rajanish Kakade)
அரை சதம் விளாசிய ஷிவம் துபே, ஜெய்ஸ்வால் (AP Photo/ Rajanish Kakade) (AP)

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆப்கனை பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து முதலில் இந்தியா பந்துவீசியது. இதையடுத்து அந்த அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களை சேர்த்தது.

குல்பதீனை தவிர மற்ற ஆப்கன் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ரவி பிஷ்ணோய், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஷிவம் துபே 1 விக்கெட்டை எடுத்தார். பின்னர், 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடியது.

முதல் டி20ஆட்டத்தைப் போல் இதிலும் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார் ரோகித். ரசிகர்கள் ஏமாற்றத்துடன் விரக்தியும் அடைந்தனர்.

அவர் ஃபார்மில் இல்லாதது தெரிகிறது. டி20 உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில், அவர் சிறப்பாக பழைய ஃபார்முக்கு வர வேண்டியது அவசியம்.

எனினும் அவருடன் களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 68 ரன்கள் விளாசி அசத்தினார். இது அவருக்கு 4வது டி20 அரை சதம் ஆகும். 6 சிக்ஸர், 5 போர்ஸ் விளாசினார். 34 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்தபோது கரிம் ஜனத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஜெய்ஸ்வால். விராட் கோலி, 29 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா ரன்னின்றியும் நடைடையக் கட்டினர்.

ஷிவம் துபே சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினார். குறிப்பாக ஸ்பின் பவுலிங்கை பிரித்து மேய்ந்தார் எனலாம்.

இவ்வாறாக இந்திய அணி இலக்கை எட்டி வெற்றி கண்டது. இந்தியா தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.