India U19 in Finals: பக்காவான ஆட்டம்! 7 பந்துகள் மீதமிருக்க தென் ஆப்பரிக்காவை வீழ்த்தி பைனலில் நுழைந்த இந்திய யு19
ஒரு புறம் அடுத்தடுத்த விக்கெட்டுகளின் சரிவு டென்ஷனை உண்டாக்கியபோதிலும், கடைசியில் 7 பந்துகள் மீதமிருக்க 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது இந்தியா யு19 அணி.ி
யு19 உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பரிக்காவில் நடைபெற்று வருகிறது. 15வது யு19 உலகக் கோப்பை தொடரான இதில், இந்தியா, தென்ஆப்பரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய யு19 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இதையடுத்து முதல் அரையிறுதி போட்டி இந்தியா - தென் ஆப்பரிக்கா இடையே பெனோனி மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக இந்தியா இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்தது யு19 அணி. இதையடுத்து முதலில் பேட் செய்த தென் ஆப்பரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. இந்திய பவுலர்களில் ராஜ் லிம்பானி 3, முஷிர் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து சேஸிங்கில் களமிறங்கிய இந்தியா 48.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன், கேப்டன் இன்னிங்ஸை வெளிப்படுத்தி 81 ரன்கள் எடுத்தார்.
மிடில் ஆர்டரில் களமிறங்கிய சச்சின் தாஸ், கொஞ்சம் விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டு 96 ரன்கள் எடுத்தார். இவர்களின் இருவரின் ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றி சாத்தியமானது. ஒரு கட்டத்தில் 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா யு19 அணி தடுமாறியது.
அப்போது உதய் சஹாரன் - சச்சின் தாஸ் இணைந்து அணியை மீட்டனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு இருவரும் 171 ரன்கள் சேர்த்தனர். நடப்பு சாம்பியனான இந்திய அணி மீண்டும் பைனலில் நுழைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்