IND vs SA 1st T20 Preview: தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக முதல் டி20 போட்டி! சாதிக்குமா இந்திய இளம் படை? எதில் பார்க்கலாம்
ஜடேஜா, குல்தீப் யாதவ் தவிர இந்திய வீரர்கள் பெரும்பாலோனருக்கு முதல் தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணமாக இந்த தொடர் அமைகிறது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஒத்திகையாக நடைபெறும் இந்த போட்டியில் இந்த இளம் படை சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி டி20, ஒரு நாள், டெஸ்ட் என மூன்று வகை போட்டிகளில் விளையாடுகிறது, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. டி20 தொடரின் முதல் போட்டி டர்பன் கிங்ஸ்மேட் மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஒத்திகையாக இந்த போட்டி அமைகிறது. இந்த தொடருக்கு அடுத்தபடியாக இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
அதேபோல் தென் ஆப்பரிக்கா அணியும் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு பின் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்தியா இளம் வீரர்கல் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளது. குறிப்பாக சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா, பவுலர்களில் முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் மூலம் இளம் வீரர்களின் திறமை, ஆட்டத்திறன், அழுத்தத்தை கையாளும் தன்மையை எடைபோடும் என தெரிகிறது.
இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே கடைசியாக 2022இல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா 2 வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றியது.
2017-18 தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணத்தின் போது இந்தியா அங்கு டி20 தொடரில் விளையாடியது. இதில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
2015இல் இந்தியாவில் நடைபெற்ற ட
டி20 தொடரில்தான் தென்ஆப்பரிக்கா கடைசியாக வெற்றி பெற்றது. இதன் பின்னர் 8 ஆண்டுகளாக வெற்றிக்காக காத்து கிடக்கிறது.
உள்ளூர் சாதகத்தை தென் ஆப்பரிக்கா அணி நன்கு பயன்படுத்தி கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் தவிர மற்றவர்களுக்கு முதல் தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணமாக இருப்பதால் நல்ல அனுபவத்தை பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 தொடரில் மருத்து எமெர்ஜென்சி காரணமாக மிஸ்ஸான தீபக் சஹார் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என தெரிகிறது.
பிட்ச் நிலவரம்
போட்டி நடைபெறும் கிங்ஸ்மேட் மைதானம் சமீபத்தில் போட்டிகளில் இயல்பை மீறி மெதுவாக செயல்பட்டது. இருப்பினும் பவுலர்களை காட்டிலும் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ஜொலிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. அதே போல் ஸ்பின்னர்களுக்கும் நன்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியா - தென்ஆப்பரிக்கா அணிகள் டி20 போட்டிகளில் 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 13, தென் ஆப்பரிக்கா 10, ஒரு போட்டி முடிவில்லாமல் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை வெல்ல வேண்டும் என்கிற நீண்ட நாள் முயற்சியை நிறைவேற்றும் விதமாக தென் ஆப்பரிக்கா விளையாடும் என தெரிகிறது.
இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியானது ஸ்டார் ஸ்போர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகிறது. டிஜிட்டல் தளத்தை பொறுத்தவரை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஸ்டீரிமிங் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்