India Innings: ஆறு டக் அவுட் - 98 ரன்கள் முன்னிலை! இந்தியா பேட்டர்களை வாரி சுருட்டிய தென் ஆப்பரிக்காவின் மூவர் கூட்டணி
ராசியில்லாத கேப்டவுன் மைதானத்தில் தென் ஆப்பரிக்காவை மிகவும் குறைந்தபட்ச ஸ்கோரில் சுருட்டி சாதித்தனர் இந்திய பவுலர்கள். இதைப்போல் பேட்டர்கள் ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிய ஸ்கோர் எடுக்க தவறினர்.

கேஎல் ராகுல் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் லுங்கி இங்கிடி (AFP)
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என சமநிலை செய்தது. இதைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் செஷன் வேகப்பந்து வீச்சாளர்களு நன்கு சாதமாக ஆடுகளம் இருந்த நிலையில், பந்தும் நன்றாக ஸ்விங் ஆனது. இதை நன்கு பயன்படுத்தி கொண்ட இந்திய பவுலர்கள் தென் ஆப்பரிக்காவை 55 ரன்களில் ஆல்அவுட் செய்தனர்.