India First Innings: இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வில்லனாக மாறிய டேவிட் வில்லி.. ஈஸி ஸ்கோரை சேஸ் செய்யுமா இங்கிலாந்து
Cricket World Cup 2023: இங்கிலாந்து பவுலர் டேவிட் வில்லி 10 ஓவர்கள் வீசி 45 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 29வது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் இந்தியா பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன்களை எடுத்தது. 230 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடவுள்ளது.
தொடக்கம் முதலே இந்திய அணி தடுமாறியது. எப்போதும் அதிரடி காட்டும் கில், இன்று 9 ரன்களில் நடையைக் கட்டி அதிர்ச்சி கொடுத்தார்.
நம்பிக்கையுடன் ரோகித் சர்மா நின்று கொண்டிருந்த நிலையில், விராட் கோலி, டக் அவுட்டாகி சென்றார்.
பின்னர் வந்த ஸ்ரேயஸ் ஐயர் 4 ரன்களில் ஆட்டமிழக்க அணி தள்ளாடியது.
இதையடுத்து, வந்த கே.எல். ராகுல் பொறுப்புடன் விளையாடினார். மறுபக்கம் ரோகித் சர்மா அரை சதம் பதிவு செய்தார்.
ராகுலும் அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வில்லி பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.
கேப்டனாக 100வது ஆட்டத்தில் விளையாடிய ரோகித் சர்மா, சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 87 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அவர் அடில் ரஷித் பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 8 ரன்களிலும், முகமது ஷமி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 49 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் ஆனார்.
விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் ஆகிய 3 பவர்ஃபுல் பேட்ஸ்மேன்கள் டேவிட் வில்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
9 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 229 ரன்களை எடுத்துள்ளது. 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடவுள்ளது. இந்த தொடரில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே இங்கிலாந்து பெற்றிருக்கிறது. அதேநேரம், இந்தியா தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்றுள்ளது.
ரோகித் சாதனை
ரோகித் ஷர்மா இந்த ஆண்டு 50 ஓவர் வடிவத்தில் 1000 ரன்கள் எடுத்து மைல்கல்லை எட்டினார். அவர் தனது 21வது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டினார் மற்றும் இந்த ஆண்டு சராசரியாக 55.66 பேட்டிங் செய்தார். அவர் இரண்டு சதங்கள் மற்றும் ஏழு அரை சதங்கள் அடித்துள்ளார். ஷுப்மான் கில் மற்றும் இலங்கையின் பாத்தும் நிசாங்கவுக்குப் பிறகு 2023 இல் 1000 ரன்களைக் கடந்த மூன்றாவது பேட்டர் ஆனார்.
அவர் ஒரு காலண்டர் ஆண்டில் ஐந்தாவது முறையாக 1,000 ரன்களுக்கு மேல் அடித்தார். 2013, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் 1000 ரன்களை எடுத்துள்ளார். அவர் 2019 இல் 28 இன்னிங்ஸில் 7 சதங்கள் உட்பட 1490 ரன்கள் எடுத்தார்.
ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை 2023 போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது 18000 சர்வதேச ரன்களை நிறைவு செய்தார்.
அவர் தனது 477வது இன்னிங்ஸை விளையாடிய பிறகு இந்த மைல்கல்லை எட்டினார். மேலும் அவ்வாறு செய்த ஐந்தாவது இந்திய வீரர் ஆனார். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி ஆகியோரின் பட்டியலில் அவர் இணைந்துள்ளார்.
அவர் அடித்த அனைத்து 18000 சர்வதேச ரன்களில், 3677 ரன்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து வந்தது, அவர் 3853 ரன்கள் t20 யிலும் 50 ஓவர் வடிவத்தில் 10470 ரன்களும் எடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 45 சதங்களும், 98 அரைசதங்களும் அடித்துள்ளார்.
டாபிக்ஸ்