தமிழ் செய்திகள்  /  Cricket  /  India Cricket Team Former Player, Stylish Bats Gundappa Viswanath Birthday Today

HBD Gundappa Viswanath: கடினமான சென்னை பிட்ச், மிரட்டல் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள்..! இந்தியா வெற்றிக்கு உதவிய 97 ரன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 12, 2024 08:00 AM IST

குண்டப்பா விஸ்வநாத் விளையாடியிருக்கும் 91 டெஸ்ட் போட்டிகளில், தொடர்ச்சியாக 87 போட்டிகள் விளையாடிய வீரராக இருந்து வரும் இவர் கன்சிஸ்டென்டான பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் குண்டப்பா விஸ்வநாத்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் குண்டப்பா விஸ்வநாத்

ட்ரெண்டிங் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த இன்னிங்ஸாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விவிஎஸ் லக்‌ஷமன் அடித்த 281 ரன்கள் கூறப்படுவதுண்டு. ஆனால் அதற்கு முன்னர், சென்னை சேப்பாக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விஸ்வநாத் அடித்த 97 ரன்கள் எடுத்த ஆட்டம் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த இன்னிங்ஸாக கருதப்பட்டது. இவரது சிறந்த ஆட்டங்களில் பெரும்பாலானவை பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுக்கும் விதமாக அமைந்திருக்கும் கடினமான பிட்ச்களிலேயே அமைந்துள்ளன

ஒற்றை ஆளாக ஆண்ட ராபர்ட்ஸ், வேன்பர்ன் ஹோல்டர், கெய்த் பாய்ஸ் போன்ற வலிமை வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து அட்டாக்க எதிர்கொண்ட விஸ்வநாத் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இந்த போட்டியில் விஸ்வநாத் 97 ரன்களுக்கு அடுத்தபடியாக அசோக் மன்கட் அடித்த 19 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த இன்னிங்ஸ் விஸ்டன் கிரிக்கெட்டில் சிறந்த 100 இன்னிங்ஸில் 38வது இடத்தில் உள்ளது. இவர் சதமடித்த ஒரு போட்டியிலும் இந்தியா அணி தோல்வியுற்றது கிடையாது. அதேபோல் இவரது பல இன்னிங்ஸில் சதமடிக்கப்படவில்லை என்றாலும், அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பாக இருந்தது.

டெஸ்ட் போல் ஒரு நாள் கிரிக்கெட்டிலும் சில மறக்க முடியாத இன்னிங்ஸை விளையாடியுள்ளார் விஸ்வநாத்.1975, 1979 ஆகிய இரு உலகக் கோப்பைகளில் விளையாடிய இவர், 1979 உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 75 ரன்கள் எடுத்து மிரட்டினார். பீல்டிங் ஸ்லிப் பொஷிசனில் நிற்கும் விஸ்வநாத் சிறந்த பீல்டராகவே ஜொலித்தார்.

இந்திய அணி முன்னாள் கேப்டனும், டாப் பேட்ஸ்மேனுமான சுனில் கவாஸ்கர் தங்கையை திருமணம் செய்து கொண்டார் குண்டப்பா விஸ்வநாத். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் மேட்ச் ரெப்ரியாக செயல்பட்டார். தொடர்ச்சியாக 87 போட்டிகளில் போட்டிகள் விளையாடியது. தொடர்ச்சியாக 7 அரைசதங்கள், இளம் வயதிலேயே சதமடித்தவர் என பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் விஸ்வநாத். 1970களில் இந்திய கிரிக்கெட் ஸ்டைலிஷ் பேட்ஸ்மேனாக திகழ்ந்த குண்டப்பா விஸ்வநாத்துக்கு இன்று பிறந்தநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score stay connected with HT Tamil