Ind vs Ire Result: Iconic சிக்ஸர் ஷாட்டில் பினிஷ் செய்த பண்ட்! ரோகித் அரைசதம் - அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா
ஆட்டத்தில் ஆரம்ப ஓவர்களில் திணறியபோதிலும், பின்னர் சிறப்பாக பேட் செய்து ரோகித் அரைசதம் அடித்தார். தனது பாணி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் Iconic சிக்ஸர் ஷாட்டில் பினிஷ் செய்தார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்காக அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையும் புரிந்துள்ளார் ரோகித் ஷர்மா.

அயர்லாந்துக்கு எதிராக Iconic சிக்ஸர் ஷாட்டில் பினிஷ் செய்த பண்ட் (PTI)
டி20 உலகக் கோப்பை தொடரின் 8வது போட்டி இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையே நியூயார்க்கில் நடைபெற்றது. குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருக்கும் இரு அணிகளும், இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது முதல் போட்டியில் களமிறங்கின.
இந்திய அணி கடைசியாக விளையாடி 5 டி20 போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது. அயர்லாந்து அணி தனது கடைசி 5 டி20 போட்டியில் 3 வெற்றிகளை பெற்றிருக்கிறது.
இந்த போட்டியில் சுமார் 18 மாதங்களுக்கு பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். அதேபோல் ஹார்திக் பாண்ட்யாவை சேர்ந்து நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கியது.