Border Gavaskar Trophy: 5 டெஸ்ட், 2 முதல் தர போட்டி! இந்தியா அணிக்குள்ளே ஒரு போட்டி - பார்டர் கவாஸ்கர் கோப்பை அட்டவணை
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கு முன் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதும் இரண்டு முதல் தர கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. அதன் படி 5 டெஸ்ட், 2 முதல் தர போட்டி! இந்தியா அணிக்குள்ளே ஒரு போட்டி என பார்டர் கவாஸ்கர் கோப்பை அட்டவணை அமைந்துள்ளது.
இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி அங்கு பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் கோப்பை தொடரை விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையே மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் நான்காவது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட போட்டி நவம்பர் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இரண்டு முதல் தர கிரிக்கெட் போட்டி
இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையே இரண்டு முதல் தர போட்டிகள் நடக்கவுள்ளன. அக்டோபர் 31 முதல் நவம்பர் 3 வரை முதல் பேட்டி மெக்கே மைதானத்திலும், இரண்டாவது போட்டி நவம்பர் 7 முதல் 10 வரை மெர்போர்னிலும் விளையாட இருக்கிறது. இந்த இரு போட்டிகளும் நான்கு நாள் ஆட்டங்களாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியை தொடர்ந்து இந்தியா ஏ அணிக்கு எதிராக இந்திய அணி உள் அணி போட்டியாக விளையாடும். இதன் மூலம் அணியினருக்கு நல்ல பயிற்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக இரண்டு முறை ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்றிருக்கும் இந்தியா இந்த முறை ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.
நான்கு தொடர்களில் தோல்வி
ஆஸ்திரேலியா அணி கடைசியாக நடைபெற்ற நான்கு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர்களிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதில் 2018-19, 2020-21 ஆகிய தொடர்களில் சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தொடர், சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெற இருக்கிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் கோப்பை அட்டவணை
ஆஸ்திரேலியா ஏ - இந்தியா ஏ முதல் முதல் தர போட்டி தொடர் அக்டோபர் 31-நவம்பர் 3, கிரேட் பேரியர் ரீஃப் அரினா, மேக்கே
இரண்டாவது முதல் தர போட்டி: நவம்பர் 7-10, மெல்போர்ன்
இந்தியா - இந்தியா ஏ இன்ட்ரா ஸ்குவாட் போட்டி, நவம்பர் 15-17, டபிள்யூஏசிஏ மைதானம், பெர்த்
இந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முதல் டெஸ்ட்: நவம்பர் 22 - 26, பெர்த்
இரண்டாவது டெஸ்ட்: டிசம்பர் 6 - 10, அடிலெய்ட்
மூன்றாவது டெஸ்ட்: டிசம்பர் 14 -18, தி காபா, பிரிஸ்பேன்
நான்காவது டெஸ்ட்: டிசம்பர் 26 - 30, மெல்போர்ன் - பாக்சிங் டே டெஸ்ட்
ஐந்தாவது டெஸ்ட்: ஜனவரி 3 - 7, சிட்னி
கடைசியாக கடந்த ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்