India 1st Innings Score: சதத்தை தவறவிட்ட ஜடேஜா.. முதல் இன்னிங்ஸில் இந்தியா 436 ரன்கள் குவிப்பு-india 1st innings score against england in test cricket at rajiv gandhi international stadium hyderabad - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  India 1st Innings Score: சதத்தை தவறவிட்ட ஜடேஜா.. முதல் இன்னிங்ஸில் இந்தியா 436 ரன்கள் குவிப்பு

India 1st Innings Score: சதத்தை தவறவிட்ட ஜடேஜா.. முதல் இன்னிங்ஸில் இந்தியா 436 ரன்கள் குவிப்பு

Manigandan K T HT Tamil
Jan 27, 2024 10:49 AM IST

England vs India 1st Test: ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முன்னதாக, ரவீந்திர ஜடேஜா சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் நம்பினர்.

அக்சர் படேல் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை சக வீரர்களிடம் பகிர்ந்து கொண்ட அகமது. REUTERS/Francis Mascarenhas
அக்சர் படேல் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை சக வீரர்களிடம் பகிர்ந்து கொண்ட அகமது. REUTERS/Francis Mascarenhas (REUTERS)

இந்திய அணி 121 ஓவர்களில் 436 ரன்களை குவித்தது. இங்கிலாந்தை விட 190 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து, இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. முன்னதாக, இங்கிலாந்து தரப்பில் முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் 4 விக்கெட்டுகளை அள்ளினார். டாம் ஹார்ட்லி, ரெஹன் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஜாக் லீச் 1 விக்கெட்டை எடுத்தார்.

இங்கிலாந்து-இந்தியா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது நாள் முடிவில் இந்தியா 175 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. முதல் நாளில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை எடுத்தது.

அந்த அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் மட்டுமே 70 ரன்கள் விளாசினார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் 3 விக்கெட்டுகளையும் பும்ரா, அக்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

இதையடுத்து, தனது முதலாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா.

இந்தியா முதல் இன்னிங்ஸ்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்களிலும் கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்களிலும் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 23 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் நங்கூரமாய் நின்று நிதானமாக விளையாடினார். அரை சதமும் விளாசி அசத்தினார். இன்றைய ஆட்டம் அவரது 50 வது டெஸ்ட் போட்டியாகும்.

50வது டெஸ்டில் அரை சதம் அடித்து அசத்தினார் கே.எல்.ராகுல். அவர் 123 பந்துகளில் 86 ரன்கள் எடுத்திருந்தபோது டாம் ஹார்ட்லி வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

ஆல்-ரவுண்டர் ஜடேஜா நிதானமாக விளையாடி அரை சதம் பதிவு செய்து அசத்தினார். பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்பியுள்ளார் ஜடேஜா. இவர் 155 பந்துகளில் 81 ரன்கள் விளாசி களத்தில் உள்ளார். மொத்தம் 3 ஃபோர்ஸ் விரட்டியிருக்கிறார்.

விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 41 ரன்கள் எடுத்திருந்தபோது எல்பிடபிள்யூ ஆகி அவுட்டானார்.

பின்னர் வந்த தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின், 1 ரன்னில் ரன் அவுட்டானார். அக்சர் படேல் 35 ரன்களுடன் ஜடேஜாவுடன் களத்தில் இருந்தார்.

இவ்வாறாக இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 110 ஓவர்களில் 421 ரன்களை எடுத்துள்ளது.

இங்கிலாந்தை விட 175 ரன்கள் முன்னிலையில் இருந்தது இந்தியா. இன்று 3வதுநாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.