IND vs USA Toss: சூப்பர் 8 சுற்றுக்கான பலப்பரிட்சை! காயம் காரணமாக யுஎஸ்ஏ கேப்டன் மோனாக் படேல் காயம் - இந்தியா பவுலிங்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Usa Toss: சூப்பர் 8 சுற்றுக்கான பலப்பரிட்சை! காயம் காரணமாக யுஎஸ்ஏ கேப்டன் மோனாக் படேல் காயம் - இந்தியா பவுலிங்

IND vs USA Toss: சூப்பர் 8 சுற்றுக்கான பலப்பரிட்சை! காயம் காரணமாக யுஎஸ்ஏ கேப்டன் மோனாக் படேல் காயம் - இந்தியா பவுலிங்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 12, 2024 11:23 PM IST

இந்தியா - யுஎஸ்ஏ அணிகளுக்கு இடையிலான போட்டி சூப்பர் 8 சுற்று வாய்ப்புக்கான பலப்பரிட்சையாகவே அமைந்துள்ளது. யுஎஸ்ஏ அணியின் கேப்டன் மோனாக் படேல் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை.

சூப்பர் 8 சுற்றுக்கான பலப்பரிட்சை, காயம் காரணமாக யுஎஸ்ஏ கேப்டன் மோனாக் படேல் அவுட்
சூப்பர் 8 சுற்றுக்கான பலப்பரிட்சை, காயம் காரணமாக யுஎஸ்ஏ கேப்டன் மோனாக் படேல் அவுட் (Getty Images via AFP)

அதன்படி இன்றைய போட்டியில் இந்தியா, யுஎஸ்ஏ ஆகிய அணிகளில் ஒன்று, முதல் தோல்வியை சந்திக்கும். அத்துடன் வெற்றியடையும் அணி இந்த குரூப்பில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் என்கிற வாய்ப்பும் உள்ளது.

இந்தியா பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி வெற்றி கூட்டணியுடன் களமிறங்குகிறது.

யுஎஸ்ஏ அணியின் கேப்டன் மோனாக் படேல் இடது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஆரோன் ஜோன்ஸ் இந்த போட்டியில் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

விராட் கோலி இன்றைய போட்டியில் அரைசதமடித்தால், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதமடித்த வீரர் என்ற சாதனையை சமன் செய்வார்.

பிட்ச் நிலவரம்

டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சவால் அளிக்ககூடிய வகையில் நியூயார்க் மைதானத்தின் பிட்ச் இருந்து வருகிறது.

பவுலர்களுக்கு நன்கு உதவிகரமாக இருக்கும் எனவும், ஆரம்பகத்தில் விக்கெட்டுகளை அள்ளலாம் எனவும் பிட்ச் பற்றி கணிக்கப்பட்டுள்ளது. எனவே முதலில் பவுலிங் செய்வதே சிறப்பானது எனவும் கூறப்பட்டுள்ளது.

பிட்ச் கணிப்பின் படி டாஸ் வென்ற ரோகித் ஷர்மா முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

டாப் இடத்தில் ஆரோன் ஜோன்ஸ்

யுஎஸ்ஏ பேட்ஸ்மேன்களில் ஸ்டிரைக் பேட்ஸ்மேனாகவும், நடந்து வரும் டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் அதிக ஸ்கார் அடித்த பேட்ஸ்மேன்களில் இரண்டாவது இடத்திலும் ஆரோன் ஜோன்ஸ் உள்ளார்.

இந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜோன்ஸ் 130 ரன்கள் எடுத்துள்ளார். யுஎஸ்ஏ அணி இதுவரை பெற்றிருக்கும் இரண்டு போட்டிகளுக்கும் முக்கிய பங்களிப்பை அளித்துள்ளார் ஜோன்ஸ். 

கனடாவுக்கு எதிராக போட்டியில் 94 ரன்கள் அடித்ததோடு, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 36 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். 

இன்றைய போட்டியில் விளையாட இருக்கும் இரு அணிகளின் விவரம்

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் டூபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா,அக்‌ஷர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்

யுஎஸ்ஏ: ஸ்டீவன் டெய்லர், ஷயன் ஜஹாங்கீர்,ஆண்ட்ரீஸ் கவுஸ், நிதிஷ் குமார், ஆரோன் ஜோன்ஸ் (கேப்டன்), கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், ஷாட்லி வான் ஷால்க்விக், ஜஸ்தீப் சிங், 10 சவுரப் நேத்ரவல்கர், அலி கான்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.