Ind vs SL 3rd ODI Preview: 27 ஆண்டுகளுக்கு பின் சாதனை வெற்றி!அச்சுறுத்தலாக இருக்கும் 20 ஓவர்கள் - இந்தியா பக்கா பிளான்
ஒரு நாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் இலங்கை, சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி 27 ஆண்டுகளுக்கு பின் சாதனை வெற்றியை நோக்கி களமிறங்குகிறது. இலங்கை பவுலர்கள் வாண்டர்சே, அசலங்கா ஆகியோரின் 20 ஓவர்கள் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் இந்திய அணி அதற்கு ஏற்ப பாக்கா பிளான் செய்து களமிறங்கும்.

27 ஆண்டுகளுக்கு பின் சாதனை வெற்றி நோக்கி இலங்கை, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 20 ஓவர்கள்
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியா டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-0 என முழுமையாக வென்றது.
இதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரண்டு போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் 1-0 என இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி டை ஆன நிலையில், இரண்டாவது போட்டியில் இலங்கை 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒரு நாள் தொடருக்கான வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது.