Ind vs SL 2nd T20: துல்லியமாக பந்து வீசிய இந்திய பவுலர்கள்! இலங்கை பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் திணறல்
முதல் 10 ஓவரில் இலங்கை அணி ஆட்டத்தை தனது கட்டுப்பாடில் வைத்திருந்த நிலையில், அடுத்த 10 ஓவர்களை துல்லியமாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் விக்கெட்டுகளை அள்ளியதோடு, ரன் குவிப்பையும் கட்டுப்படுத்தினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இலங்கை பேட்டிங் சரிவடைந்தது.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியா டி20, ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வரும் நிலையில், முதல் போட்டியில் இந்தியா 43 ரன்கள் வித்தியாச்சத்தில் வெற்றி பெற்றது.
இதனால் 1-0 என்ற கணக்கில் தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி பல்லேகலேவில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியில் சுப்மன் கில் கழுத்தில் லேசான அசெளகரியம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். மழை காரணமாக போட்டியானது 45 நிமிடங்கள் கழித்து தொடங்கியது.
இந்திய பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக குசால் பெராரே 53, பதும் நிசாங்கா 32, கமிந்து மெண்டிஸ் 26 ரன்கள் எடுத்தனர்.
இந்திய பவுலர்களில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். கடந்த போட்டியில் பகுதி நேர பந்து வீச்சாளராக பவுலிங்கில் திருப்புமுனை தந்த பராக் இந்த போட்டியில் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை
குசால் பெராரே, நிசங்கா அதிரடி
ஓபனரான நிசங்கா நல்ல பார்மில் இருந்து வரும் நிலையில் முதல் போட்டியை போல் இந்த போட்டியில் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை தந்தார். விரைவாக ரன்கள் குவித்த அவர் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட்டார்.
இவரை தொடர்ந்து நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் தொடக்கம் முதலே பவுண்டரி, சிக்ஸர் என இந்திய பவுலர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினார். அரைசதமடித்த மெண்டிஸ் 34 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். தனது இன்னிங்ஸில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார்.
பேட்டிங்கில் சரிவு
15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் என வலுவான நிலையில் இலங்கை அணி இருந்தது. இதையடுத்து கடைசி கட்டத்தில் இந்திய பவுலர்கள் துல்லியமாக பந்து வீச இலங்கை ரன்குவிப்பை கட்டுப்படுத்தியதோடு, அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் தூக்கினர்.
இதனால் இலங்கை பேட்டிங் வரிசை சரிந்தது. கடைசி 5 ஓவரில் 31 ரன்கள் மட்டும் எடுத்த இலங்கை 6 விக்கெட்டுகளை இழந்தது.
முன்னதாக, முதல் டி20 போட்டியிலும் 214 ரன்கள் சேஸ் செய்த போது இலங்கை அணி 14.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 140 ரன்கள் என் வலுவாக இருந்தது. இதைத்தொடர்ந்து 30 ரன்கள் மட்டுமே எடுத்த 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது.
இதைப்போல் இரண்டாவது டி20 போட்டியிலும் இலங்கை அணியின் பேட்டிங் சரிவு தொடர்ந்துள்ளது. அதேவேளையில் கடைசி கட்டத்தில் இந்த இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்