IND vs SA Third ODI Result: பவுலிங்கில் கலக்கிய அர்ஷ்தீப்! 78 ரன்களில் வெற்றி - இளம் படையுடன் சாதித்த கேஎல் ராகுல்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Sa Third Odi Result: பவுலிங்கில் கலக்கிய அர்ஷ்தீப்! 78 ரன்களில் வெற்றி - இளம் படையுடன் சாதித்த கேஎல் ராகுல்

IND vs SA Third ODI Result: பவுலிங்கில் கலக்கிய அர்ஷ்தீப்! 78 ரன்களில் வெற்றி - இளம் படையுடன் சாதித்த கேஎல் ராகுல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 22, 2023 12:35 AM IST

IND vs SA Third ODI Result: தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு தொடக்கத்தில் இருந்தே நெருக்கடி தரும் விதமாக இந்திய பவுலர்கள் செயல்பட்டனர். முக்கிய பேட்ஸ்மேனான ஹென்ரிச் ஹால்சன் விக்கெட்டை அற்புதமான கேட்ச் பிடித்து வெளியேற்றினார் சாய் சுதர்சன்.

ஹென்ரிச் காஸ்சன் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்
ஹென்ரிச் காஸ்சன் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் (AFP)

இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்தது. இந்திய பேட்ஸ்மேன்களில் சஞ்சு சாம்சன் சிறப்பாக பேட் செய்து அதிகபட்சமாக 108 ரன்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக திலக் வர்மா 52 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் முறையே தங்களது முதல் சதம், அரைசதத்தை அடித்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரிங்கு சிங் 38 ரன்கள் அடித்தார்.

தென் ஆப்பரிக்கா பவுலர்களில் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் 3, நாந்த்ரே பர்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து சேஸிங்கில் களமிறங்கிய தென் ஆப்பரிக்கா அணி 45.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

அத்துடன் தென் ஆப்பரிக்காவில் ஒரு நாள் தொடரை வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் கேஎல் ராகுல். தென் ஆப்பரிக்கா மண்ணில் இரண்டாவது முறையாக ஒரு நாள் தொடரை வென்ற ஆசிய அணி என்ற பெருமையை இந்திய பெற்றுள்ளது. 

கடைசியாக 2018 சுற்றுப்பயணத்தின்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை வென்றது. இதைத்தொடர்ந்து தற்போது கேஎல் ராகுல் தலைமையிலான இளம்படை 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்பரிக்கா அணியின் முக்கிய பேட்ஸ்மேனான ஹென்ரிச் ஹால்சன் விக்கெட்டை ஆவேஷ் கான் வீழ்த்தினார். 21 ரன்கள் அடித்திருந்த அவரை அற்புத பிளையிங் கேட்ச் மூலம் வெளியேற்றினார் சாய் சுதர்சன். இந்த தருணம் போட்டியின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்திய பவுலர்களில் சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஸ்பின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அக்‌ஷர் படேல், முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

108 ரன்கள் அடித்து இந்த போட்டியை வெற்றி பெற காரணமாக அமைந்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் முழுவதும் சிறப்பான பவுலிங் மூலம் தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்களை மிரட்டிய அர்ஷ்தீப் சிங் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.