IND vs SA Innings Break: கடினமான பிட்சில் கலக்கலாக பேட் செய்த சஞ்சு சாம்சன்! இந்திய 296 ரன்கள் குவிப்பு
India vs South Africa Innings Break: மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோரின் பார்ட்னர்ஷிப் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இவர்கள் இருவரும் இணைந்து 116 ரன்கள் குவித்தனர். இதனால் இந்தியா 297 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி பார்ல் நகரிலுள்ள போலாந்து பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய பேட்ஸ்மேன்களில் சஞ்சு சாம்சன் சிறப்பாக பேட் செய்த சஞ்சு சாம்சன் ஒரு நாள் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்தார். இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக சாம்சன் 108 ரன்கள் அடித்து சிக்ஸர் முயற்சியில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக அரைசதமடித்த திலக் வர்மா 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். இது அவரது முதல் அரைசதமாக அமைந்தது.
கடைசி நேரத்தில் ரிங்கு சிங் அதிரடி காட்டினார். அவர் 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்த ரிங்கு சிங் மூன்றாவது பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து பவுண்டரி அருகே பிடிபட்டார்.
தென் ஆப்பரிக்கா பவுலர்களில் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நாந்த்ரே பர்கர் 2 விக்கெட்டுகளை எடுத்தார். லிசாட் வில்லியம்ஸ், வியான் முல்டர், கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இன்றைய போட்டியில் முதல் இரண்டு ஆட்டங்களில் பேட்டிங்கில் சொதப்பி வந்த ருதுராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக ராஜ்தத் பட்டிதார், இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவுக்கு பதிலாக தமிழ்நாட்டை சேர்ந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர்.
முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து அரைசதம் அடித்து பேட்டிங்கில் கலக்கிய ஓபனிங் பேட்ஸ்மேனான தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் இன்றைய போட்டியில் 10 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். ருதுராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக சேர்க்கப்பட்ட பட்டிதார் 16 பந்துகளில் 22 ரன்கள் என விரைவாக அடித்து பெவிலியன் திரும்பினார்.
பேட்டிங்கில் நல்ல பார்மில் இருந்து வந்த கேஎல் ராகுல் 21 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் சிறிய கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பரிக்கா இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் 297 ரன்களை சேஸ் செய்ய வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9