IND vs SA Final Preview: 11 ஆண்டுகளாக இந்தியாவுக்கு தண்ணி காட்டும் ஐசிசி கோப்பை! Chokers அடைமொழியை விரட்ட அரிய வாய்ப்பு
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Sa Final Preview: 11 ஆண்டுகளாக இந்தியாவுக்கு தண்ணி காட்டும் ஐசிசி கோப்பை! Chokers அடைமொழியை விரட்ட அரிய வாய்ப்பு

IND vs SA Final Preview: 11 ஆண்டுகளாக இந்தியாவுக்கு தண்ணி காட்டும் ஐசிசி கோப்பை! Chokers அடைமொழியை விரட்ட அரிய வாய்ப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 29, 2024 10:21 AM IST

11 ஆண்டுகளாக இந்தியாவுக்கு ஐசிசி கோப்பை தண்ணி காட்டும் நிலையில், அதை வெல்வதற்கான மற்றொரு வாய்ப்பு அமைந்துள்ளது. முதல் முறையாக உலகக் கோப்பை பைனலில் விளையாட இருக்கும் தென் ஆப்பரிக்கா, தங்களது அணி மீதான Chokers அடைமொழியை விரட்ட அரிய வாய்ப்பாக உள்ளது.

 11 ஆண்டுகளாக இந்தியாவுக்கு தண்ணி காட்டும் ஐசிசி கோப்பை, Chokers அடைமொழியை விரட்ட அரிய வாய்ப்பு
11 ஆண்டுகளாக இந்தியாவுக்கு தண்ணி காட்டும் ஐசிசி கோப்பை, Chokers அடைமொழியை விரட்ட அரிய வாய்ப்பு

2007இல் முதல் முறையாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியன் ஆனது இந்தியா. அதன் பின்னர் 2014இல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், இலங்கைக்கு எதிராக தோல்வியை தழுவி ரன்னர் அப் ஆனது.

தற்போது 10 ஆண்டுகள் கழித்து மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் இந்தியா, இரண்டாவது முறையாக கோப்பையை முத்தமிட காத்திருக்கிறது.

முதல் இறுதிப்போட்டியில் தென் ஆப்பரிக்கா

தென் ஆப்பரிக்கா அணியை பொறுத்தவரை முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. எப்போதும் அரையிறுதி வரை தகுதி பெறும் அணியாக இருந்து வந்த தென் ஆப்பரிக்கா, அதன் பின் நாக்அவுட்டாகி வெளியேறுவதை வழக்கமாக கொண்டிருந்ததால் அவர்கள் Chokers என்றே கிரிக்கெட் ரசிகர்களும், வல்லுநர்களும் அழைக்கிறார்கள்.

தற்போது தங்களது முந்தை வரலாற்றை மாற்றி அமைக்கும் விதமாக முதல் முறையாக உலகக் கோப்பை பைனல் வரை நுழைந்திருக்கும் தென் ஆப்பரிக்கா முதல் உலகக் கோப்பை தன் வசமாக்கும் முனைப்பில் உள்ளது.

தென் ஆப்பரிக்கா இதற்கு முன்னர் 1998இல் நடைபெற்ற ஐசிசி நாக்அவுட் டிராபி தொடரை வென்றது. இதுவே அந்த அணி வென்றிருக்கும் ஒரே ஐசிசி கோப்பையாக உள்ளது.

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, தென் ஆப்பரிக்கா ஆகிய இரு அணிகளும் லீக், சூப்பர் 8 சுற்று என ஒரு போட்டிகளிலும் தோல்வியை தழுவாமல் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருக்கும் அணியாக உள்ளது.

புதிய சாதனை

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை அனைத்து போட்டிகளிலும் வென்ற அணி சாம்பியன் கோப்பையை வென்றது கிடையாது . ஆனால் இந்த முறை அந்த வரலாறானது மாறப்போகிறது.

இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை பெறும் அணி டி20 உலகக் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் வென்று சாம்பியன் ஆகும் அணி என்ற புதிய சாதனையையும் நிகழ்த்தும்.

ஒரே ஆண்டில் மூன்றாவது பைனல்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய இந்தியா தோல்வியை தழுவியது. இதன் பின்னர் 2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி அடைந்து கோப்பை கை நழுவியது.

இதைத்தொடர்ந்து தற்போது இந்த ஜூன் மாதத்தில் டி20 உலகக் கோப்பை பைனலில் விளையாட இருக்கிறது. மூன்றாவது முறையாக பைனல் நுழைந்திருக்கும் இந்திய அணி 2013இல் ஒரு நாள் சாம்பியன்ஸ் டிராபி வென்றதே கடைசி ஐசிசி கோப்பையாக உள்ளது.

எனவே இந்தியாவுக்கு 11 ஆண்டு காலமாக தண்ணி காட்டி வரும் ஐசிசி கோப்பை கனவு இந்த முறை நிறைவேறும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

ஐசிசி போட்டிகளில் தோல்வியை தழுவாத மார்க்ரம்

யு19 உலகக் கோப்பை தொடரில் 6 போட்டி, 2023 உலகக் கோப்பை தொடரில் 2 போட்டி, தற்போது டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் 7 போட்டி என கேப்டனாக செயல்பட்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பெற்ற கேப்டனாக உள்ளார்.

பலமான பேட்டிங் மற்றும் பவுலிங்

தென் ஆப்பரிக்கா அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் குவன்டைன் டி காக், மார்க்ரம், கிளாசன், டேவிட் மில்லர், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் என அதிரடி மன்னன்களும் பவுலிங்கில் ககிசோ ரபாடா, நார்ட்ஜே, கேசவ் மகராஜ், ஜான்சன் ஆகியோரும் உள்ளார்கள். இந்த வீரர்கள் அனைவரும் நல்ல பார்மில் இருப்பது அணிக்கு பலமான விஷயமாக அமைந்துள்ளது.

லீக், சூப்பர் 8, அரையிறுதி என 8 போட்டிகள் விளையாடியிருக்கும் தென் ஆப்பரிக்கா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது

இந்தியாவின் வெற்றி கூட்டணி

இந்தியாவை பொறுத்தவரை லீக் சுற்றில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடிய நிலையில், சூப்பர் 8 சுற்றில் கூடுதல் ஸ்பின்னருடன் விளையாடி வருகிறது. இதுவே அணியின் வெற்றிக்கு தாரக மந்திரமாகவும் அமைந்துள்ளது. எனவே இந்த வெற்றி காம்பினேஷனை இறுதிப்போட்டியிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவுக்கு லீக் சுற்றில் கனடாவுக்கு எதிரான போட்டி மழையால் ரத்தானது. இதுதவிர லீக், சூப்பர் 8 என 7 போட்டிகள் விளையாடி அனைத்திலும் வென்றுள்ளது.

பிட்ச் நிலவரம்

பேட்ஸ்மேன்கள், பவுலர்களுக்கு என இருவருக்கும் சமமான உதவி புரியும் ஆடுகளமாக பார்போடாஸ் மைதானம் உள்ளது. இறுதிப்போட்டியில் நான்காவது ஆடுகளம் பயன்படுத்தப்படும் என கூறப்படும் நிலையில் பேட்ஸ்மேன்கள், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு உதவலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு திசையில் மிகவும் நீளமான பவுண்டரி, காற்று வீசும் வேகம் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கலாம். மழைக்கான வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - தென் ஆப்பரிக்கா இதுவரை

இந்த இரு அணிகளும் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 4, தென் ஆப்பரிக்கா 2 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடரிந்து இந்தியா வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் ஆவதோடு, Chokers என்ற அடைமொழி பெயரையும் இழக்கும். அது செய்யப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.