IND vs SA 3rd T20: வானவேடிக்கை காட்டி சதமடித்த சூர்யா! தென் ஆப்பரிக்காவுக்கு சவாலான இலக்கு
சூர்யகுமார் யாதவ் சதம், யஷஸ்வி ஜெயஸ்வால் அரைசதம் உதவியுடன் இந்தியா ரன்கள் என மிகப் பெரிய ஸ்கேரை எடுத்துள்ளது. தென் ஆப்பரிக்கா பவுலர்களை பொலந்து கட்டிய இவர்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்த பிட்சில் வானவேடிக்கை நிகழ்த்தினர்.
இந்தியா - தென் ஆப்பரிக்கா இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஜோகன்னஸ்பெர்க் வான்டர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. நல்ல பார்மில் இருக்கும் இந்திய அணி கேப்டனும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான சூர்யகுமார் யாதவ் அதிரடியாக பேட் செய்து 55 பந்துகளில் சதமடித்தார். தென் ஆப்பரிக்கா பவுலர்களின் பந்து வீச்சில் வான வேடிக்கை காட்டிய சூர்யகுமார் யாதவ் சதமடித்த அடுத்த பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவர் தனது இன்னிங்ஸில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளை அடித்தார்.
இவருக்கு அடுத்தபடியாக ஓபனிங் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதமடித்து, 60 ரன்களில் அவுட்டானார். மற்ற இந்திய பேட்ஸ்மேன்களில் ரிங்கு சிங் 14, கில் 12 ரன்கள் எடுத்தனர்.
தென் ஆப்பரிக்கா பவுலர்களில் சிறப்பாக பந்து வீசிய கேசவ் மகராஜ் 26 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சாளர் ரன்களை வாரி வழங்கியபோதியும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்திய பேட்ஸ்மேன்களின் சுப்மன் கில் மோசமான பார்ம் இந்த போட்டியிலும் தொடர்ந்துள்ளது. அதேபோல் முதல் பந்திலேயே அவுட்டாகி தனது வாய்ப்பை வீணாக்கினார் திலக் வர்மா. இவர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார் கேசவ் மகாராஜ்.
அதேபோல் இந்திய அணியின் பினிஷிங்கும் மோசமாக அமைந்தது. கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்கப்பட்ட போதிலும் 3 விக்கெட்டுகளை இழந்தது.
தென் ஆப்பரிக்கா அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் 202 என்ற இமாலய இலக்கை சேஸ் செய்ய வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9