IND vs SA 3rd T20: தென் ஆப்பரிக்கா அணியில் மூன்று மாற்றங்கள்! இந்தியா பேட்டிங்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Sa 3rd T20: தென் ஆப்பரிக்கா அணியில் மூன்று மாற்றங்கள்! இந்தியா பேட்டிங்

IND vs SA 3rd T20: தென் ஆப்பரிக்கா அணியில் மூன்று மாற்றங்கள்! இந்தியா பேட்டிங்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 14, 2023 08:44 PM IST

இரண்டாவது போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் இந்தப் போட்டியிலும் இந்தியா களமிறங்கியுள்ளது. தென் ஆப்பரிக்கா அணியில் நந்த்ரே பர்கர் என இடது கை வேகப்பந்து வீச்சாளர் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

இந்தியா - தென் ஆப்பரிக்கா இடையே மூன்றாவது டி20 போட்டி நடக்கும் வான்டர்ஸ் மைதானம்
இந்தியா - தென் ஆப்பரிக்கா இடையே மூன்றாவது டி20 போட்டி நடக்கும் வான்டர்ஸ் மைதானம்

தென் ஆப்பரிக்கா அணியில் நந்த்ரே பர்கர் என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர் அறிமுக வீரராக களமிறங்குகிறார். அதே போல் கேசவ் மகாராஜ் மற்றும் டோனோவன் ஃபெரேரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டியில் தென் ஆப்பரிக்கா வெற்றி பெற்றது.

எனவே இன்றைய போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கிய இந்தியா களமிறங்குகிறது. அத்துடன் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே தொடர் சமன் ஆகும். எனவே தொடரை இழக்க விரும்பாத இந்திய அணி வெற்றிக்காக போராடும் என நம்பலாம்.

இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்:

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்,

தென் ஆப்பரிக்கா: ரிசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ பிரீட்ஸ்கே, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், டோனோவன் ஃபெரீரா, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, கேசவ் மகாராஜ், லிசாட் வில்லியம்ஸ், நந்த்ரே பர்கர், தப்ரைஸ் ஷம்சி

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.