IND vs SA 1st Test Toss Report: டாஸ் வென்று SA பீல்டிங் தேர்வு-கேப்டன் ரோகித் கூறியது என்ன?
Rohit Sharma: பிரசித் கிருஷ்ணா டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். ஜடேஜாவுக்கு பதிலாக, அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா, பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் மோதலுக்கான டாஸ் சூப்பர்ஸ்போர்ட் பூங்காவின் அவுட்பீல்ட் ஈரமாக இருப்பதன் காரணமாக டாஸ் கொஞ்ச நேரம் தாமதமானது.
ரோகித் சர்மா கூறுகையில், “முதலில் பேட்டிங் செய்வதன் சவாலை உணர்ந்திருக்கிறோம். இருந்தாலும் எங்கள் டீம் மீது நம்பிக்கை உள்ளது. நாங்கள் எங்கள் முழு முயற்சியையும் செய்வோம். அஸ்வினை சேர்த்திருக்கிறோம். ஜடேஜா இல்லை” என்றார் ரோகித் சர்மா.
தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா கூறுகையில், “ஈரப்பதம் சற்று இருப்பதன் காரணமாக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தோம். நாங்கள் தேவையான பயிற்சிகளை எடுத்திருக்கிறோம். சிறந்ததை வழங்குவோம்” என்றார்.
பிரசித் கிருஷ்ணா டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். ஜடேஜாவுக்கு பதிலாக, அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.
சென்சூரியனில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனவே, இந்தியாவுக்கு சாதகமாக இப்போட்டி அமைய வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்தியா பிளேயிங் 11:
ஜெய்ஸ்வால், ரோஹித் (கேப்டன்), கில், கோஹ்லி, ஐயர், ராகுல் (விக்கெட் கீப்பர்), அஷ்வின், தாக்கூர், பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா பல்வேறு தடைகளையும், பல்வேறு சூழ்நிலைகளையும் கடந்து ஒரு திடமான ஆல்-ஃபார்மட் வீரராக மாறிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அவர் 462 சர்வதேச போட்டிகளில் விளையாடி 18,239 ரன்கள் மற்றும் 45 சதங்களுடன் உள்ளார்.
இருப்பினும், அவருக்கு தென் ஆப்பிரிக்கா மண்ணில் ஒரு சவால் உள்ளது - இந்த மண்ணில் டெஸ்டில் ரன்கள் குவிப்பது அவருக்கு தொடர்ச்சியாக சவாலாகவே இருந்து வருகிறது. இதற்கு முன் 2013-14 மற்றும் 2017-18 ஆகிய இரண்டு சுற்றுப்பயணங்களில், எட்டு இன்னிங்ஸ்களில் 15.38 சராசரியுடன் 47 ரன்கள் மட்டுமே அதிகபட்சமாக எடுத்தார் ரோகித்.
கடைசியாக 2017-18 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் விளையாடியபோது, 1, 10, 10 மற்றும் 47 என்ற வரிசைக்குப் பிறகு சவாலான, சிக்கலான சூழ்நிலைகளில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிவரமாட்டார் என்று அவர் நீக்கப்பட்டார், காகிசோ ரபாடா மூன்று முறை ரோகித் விக்கெட்டை வீழ்த்தினார்.