IND vs SA 1st T20: டர்பனில் சாரல் மழை! போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்க வாய்ப்பு
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Sa 1st T20: டர்பனில் சாரல் மழை! போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்க வாய்ப்பு

IND vs SA 1st T20: டர்பனில் சாரல் மழை! போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்க வாய்ப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 10, 2023 07:31 PM IST

ட்ரபனில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் இந்தியா - தென் ஆப்பரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாரல் மழை காரணமாக கவர்களால் மூடப்பட்டிருக்கும் டர்பன் மைதானம்
சாரல் மழை காரணமாக கவர்களால் மூடப்பட்டிருக்கும் டர்பன் மைதானம்

இதையடுத்து டர்பனில் சாரல் மழை பெய்து வரும் நிலையில், திட்டமிட்டபடி டாஸ் நிகழ்வு நடைபெறாமல் தாமதமாகியுள்ளது. அநேகமாக மழை நின்ற பின்னர் டாஸ் போடப்பட்டு உடனடியாக போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் வரை கால தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி 4.40 மணிக்கு அடுத்து அப்டேட் தெரிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பார்த்தால் இரவு 8 மணிக்கு மேல் இந்த போட்டி குறித்த அப்டேட் வெளியாகும் என தெரிகிறது.

ஒரு மணி நேரத்தில் போட்டி தொடங்கும்பட்சத்தில் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படாது எனவும் கூறப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்குகிறது. இந்திய டி20 அணியில் ஏற்கனவே தென் ஆப்பரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வீரர்களாக ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் உள்பட சிலரே உள்ளனர்.

போட்டி நடைபெற இருக்கும் டர்பன் மைதானத்தில் இந்தியா சிறப்பான டி20 சாதனை படைத்துள்ளது. இங்கு இதுவரை 5 T20I போட்டிகளில் விளையாடி ஒரு போட்டி கூட தோல்வி அடையவில்லை. ஒட்டுமொத்தமாக, இந்த மைதானத்தில் இதுவரை 18 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில், முதலில் பேட்டிங் செய்த 8, சேஸ் செய்த அணி 8 போட்டிகளிலும் வென்றுள்ளன. ஒரு போட்டி டை ஆகியிருக்கும் நிலையில், ஒரு போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை.

முன்னதாக, டர்பனில் பிற்பகல் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு 55 சதவீதம் வரை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் மழை படிப்படியாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.