IND vs SA 1st ODI: கோலி விட்டு சென்றது! கேஎல் ராகுல் தொடர்வாரா? இந்தியா - தென் ஆப்பரிக்கா மோதும் முதல் ஒரு நாள் இன்று
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Sa 1st Odi: கோலி விட்டு சென்றது! கேஎல் ராகுல் தொடர்வாரா? இந்தியா - தென் ஆப்பரிக்கா மோதும் முதல் ஒரு நாள் இன்று

IND vs SA 1st ODI: கோலி விட்டு சென்றது! கேஎல் ராகுல் தொடர்வாரா? இந்தியா - தென் ஆப்பரிக்கா மோதும் முதல் ஒரு நாள் இன்று

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 17, 2023 06:10 AM IST

கடந்த சுற்றுப்பயணத்தின் போது மூன்று தொடர் தோல்விகளை சந்தித்த இந்தியா, அதிலிருந்து மீண்டு கம்பேக் கொடுக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பயிற்சியில் இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல்
பயிற்சியில் இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல்

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டி ஜோகன்னஸ்பெர்க் வான்டர்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணிகளிலும் டி20 தொடரில் பங்கேற்காத வீரர்கள் ஒரு நாள் தொடருக்காக விளையாடவுள்ளனர். இந்திய அணி கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்குகிறது.

இன்றைய போட்டியில் தென் ஆப்பரிக்கா அணி பிங்க் நிற ஜெர்சி அணிந்து களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக தென் ஆப்பரிக்கா அணி மாற்றி ஜெர்சியில் களமிறங்கூடும். அத்துடன் மைதானத்தும் வரும் ரசிகர்களும் பிங்க் நிற ஆடை அணிவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒட்டு மொத்தம் மைதானமும் பிங்க் நிறத்துக்கு மாறலாம்.

இந்த ஜெர்சியில் தென் ஆப்பரிக்கா அணியை, இந்திய வீழ்த்தியதாக வரலாறு இல்லை. அது இன்று மாறுமா என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

தென் ஆப்பரிக்கா ஒரு நாள் முக்கிய வீரராகவும், அதிரடியான ஓபனராகவும் இருந்த குவன்டைன் டி காக் ஓய்வு பெற்றிருக்கும் நிலையில் அவரது இடத்தை கண்டிப்பாக அணி மிஸ் செய்யும். டி காக் இல்லாமல் முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பரிக்கா விளையாட இருப்பதால், சவால் மிக்க போட்டியாகவே இருக்ககூடும். மூன்றாவது டி20 போட்டியில் களமிறக்கப்பட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளார் நாந்ரே பர்கர், இன்றைய போட்டியிலும் அறிமுக வீரராக களமிறக்கப்படுவார் என தெரிகிறது. ஸ்பின்னர்களாக கேசவ் மகராஜ், தப்ரிஸ் ஷம்ஸி என இருவர் உள்ளார்கள்.

இந்திய அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சஞ்சு சாம்சன் கம்பேக் கொடுத்துள்ளார். ஸ்பின்னர்களை பொறுத்தவரை அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், வேகப்பந்து வீச்சில் முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளார்கள்.

பிட்ச் நிலவரம்

பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியான வான்டர்ஸ் மைதானத்தில் பவுன்ஸ் நன்றாக இருந்தாலும் பேட்டிங்குக்கு சாதகமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 300 ரன்கள் வரை சராசரியான ஸ்கோர் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மழைக்கான வாய்ப்பு எதுவும் இல்லை எனவும் வெப்பநிலை 20 டிகரி வரை இருக்ககூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகள் இதுவரை 91 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 38, தென் ஆப்பரிக்கா 50 முறை வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் முடிவு கிடைக்கவில்லை.

கடைசியாக 2022இல் தென் ஆப்பரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஒரு வெற்றி கூட பெறாமல் முழுமையாக தோல்வியை சந்தித்தது.

இந்திய அணி தென் ஆப்பரிக்கா மண்ணில் கடந்த 2018இல் 6வது ஒரு நாள் போட்டியில் பெற்ற வெற்றியே அங்கு பெற்றிருக்கும் கடைசி வெற்றியாக உள்ளது. அப்போது விராட் கோலி அணியின் கேப்டனாக இருந்தார். இதையடுத்து 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்தியா வெற்றி பயணத்துக்கு திரும்புமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.