IND vs SA 1st ODI: அறிமுக போட்டியில் அரைசதமடித்து அசத்திய சாய் சுதர்ஷன்! தோல்வி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா
எளிய இலக்கை எவ்வித சிரமமும் இன்றி இந்தியா சேஸ் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பெர்க் வான்டர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.
இதையடுத்து இந்தியா பவுலர்களின் அற்புத பந்து வீச்சால் 27.3 ஓவரில் 116 ரன்களில் தென் ஆப்பரிக்கா ஆல் அவுட்டாகியுள்ளது. இந்திய பவுலர்களில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரை தொடர்ந்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளார் ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைதத்தொடர்ந்து எளிய இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய இந்தியா 16.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி இளம் ஓபனராக அறிமுக போட்டியில் களமிறங்கிய தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்ஷன், முதல் போட்டியிலேயே அரைசதமடித்து அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக ஷ்ரேயாஸ் ஐயர் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு காரணமாக தென் ஆப்பரிக்கா அணி இன்றைய போட்டியில் பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடியது. இந்த ஜெர்சியில் தென் ஆப்பரிக்கா அணி அதிக முறை தோல்வி அடைந்ததில்லை. ஆனால் இந்தியா, தென் ஆப்பரிக்காவை பிங்க் ஜெர்சியில் தோற்கடித்தது சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.
அதேபோல் கடந்த தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணத்தின் போது மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா தோல்வியை தழுவியது. அப்போது கேஎல் ராகுல் தான் கேப்டனாக இருந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த முறை இந்தியாவின் தோல்வி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கேஎல் ராகுல்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்