தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ind Vs Pak Preview: பாகிஸ்தான் அணிக்கு டபுள் நெருக்கடி! பவுலர்கள் செர்க்கபுரி நியூயார்க் பிட்ச்க்கு ஏற்ப இந்தியா திட்டம்

IND vs PAK Preview: பாகிஸ்தான் அணிக்கு டபுள் நெருக்கடி! பவுலர்கள் செர்க்கபுரி நியூயார்க் பிட்ச்க்கு ஏற்ப இந்தியா திட்டம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 09, 2024 07:00 AM IST

பாகிஸ்தான் அணிக்கு டபுள் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்குகிறது. பவுலர்களுக்கு செர்க்கபுரியாகவும், பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகவும் செயல்பட்டு வரும் நியூயார்க் பிட்ச்க்கு இந்தியா திட்டம் வகுத்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பாகிஸ்தான் அணிக்கு டபுள் நெருக்கடி, பவுலர்கள் செர்க்கபுரி நியூயார்க் பிட்ச்க்கு ஏற்ப இந்தியா திட்டம்
பாகிஸ்தான் அணிக்கு டபுள் நெருக்கடி, பவுலர்கள் செர்க்கபுரி நியூயார்க் பிட்ச்க்கு ஏற்ப இந்தியா திட்டம்

ட்ரெண்டிங் செய்திகள்

டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளன. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், டி20 உலகக் கோப்பை தொடரை பாசிடிவாக தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் யுஎஸ்ஏ அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணியின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.

பாகிஸ்தானுக்கு டபுள் நெருக்கடி

அரசியல் காரணங்கள் காரணமாக இந்த இரு அணிகளும் இடையே இரு தரப்பு தொடரானாது நடந்து 13 ஆண்டுகள் வரை ஆகிறது. எனவே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டும் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றன.

கடந்த 2022 டி20 உலகக் கோப்பையிலும் சரி, கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் கோப்பை தொடரிலும் சரி, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. எனவே அதிலிருந்து மீள வேண்டும் என்கிற நெருக்கடி இந்த டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே அணிக்கு ஏற்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் அறிமுக அணியான யுஎஸ்ஏவுக்கு எதிராக பாகிஸ்தான் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்திருப்பதால் இனி ஒவ்வொரு போட்டியும் அவர்களுக்கு முக்கியமானதாகவே உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக மீண்டும் தோல்வியை தழுவினால், மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றாலும் சூப்பர் 8 சுற்றில் நுழைவதற்கு மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை எதிர்நோக்கி இருக்க வேண்டும். அதை தவிர்க்க கட்டாயம் இந்த போட்டியில் வென்றாக வேண்டும். எனவே டபுள் நெருக்கடியுடன் பாகிஸ்தான் அணி களமிறங்க இருக்கிறது.

இந்திய அணியின் திட்டம்

முதல் போட்டியில் இருந்த அதே வெற்றிக் கூட்டணியுடனே இந்திய களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு ஸ்பின்னர்கள் என பவுலிங்கில் வலுவாக உள்ளது. அதேபோல், பேட்டிங்கிலும் அக்‌ஷர் படேல் வரை ரன் அடிக்க கூடியவார்களாக இருப்பதால் நீண்ட பேட்டிங் வரிசை கொண்ட அணியாக இருக்கிறது.

டி20 உலகக் கோப்பை தொடருக்கு வந்ததில் இருந்தே நியூயார்க்கில் முகாமிட்டுள்ள இந்திய அணி, இன்று போட்டி நடைபெற இருக்கும் மைதானத்தில் ஒரு பயிற்சி போட்டி மற்றும் லீக் ஆட்டம் விளையாடி இருப்பதால், இந்த சூழல் அணி வீரர்களுக்கு நன்கு ஒத்துபோயிருக்கும்.

எனவே எல்லாவிதத்திலும் இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலை இருந்து வந்தாலும், பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்ககூடியதாக இருக்கும் நியூயார்க் ஆடுகளம், எதிர்பாராத பவுன்சர்கள் அச்சுறுத்தலாக இருக்கும்.

அந்த வகையில் பாகிஸ்தான் அணியில் ஷாகின் அப்ரிடி, முகமது ஆமிர், ஹரிஸ் ராஃப் போன்ற அதி வேகத்துடன் வீசக்கூடிய டாப் கிளாஸ் பவுலர்கள் இருப்பதால் அவர்களை எதிர்கொள்வதற்கான வியூகம், திட்டத்துடன் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

பிட்ச் நிலவரம்

பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி தரக்கூடியதாக நியூயார்க் ஆடுகளம் இதுவரை இருந்து வந்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வேகம், ஸ்விங் என நன்கு ஒத்துழைப்பதோடு பவுன்ஸும் ஆகிறது. இந்த பிட்ச் கிரிக்கெட் விளையாடுவதற்கு உகந்ததாக இல்லை என்கிற புகாரும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐசிசியும் அதிருப்தி தெரிவித்த நிலையில், போட்டி நடத்தும் யுஎஸ்ஏ, பிட்ச் தொடர்பாக பிரச்னை இனி வராமல் இருக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இன்றைய போட்டியில் மைதானத்தில் இருக்கும் பிட்ச் 2 அல்லது 4 பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த ஆடுகளத்தில் நடந்த போட்டியில் தான் அணிகளின் ஸ்கோர் 100 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே பவுலர்கள், பேட்ஸ்மேன்கள் இருவருக்கும் சம அளவில் ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவுலர்கள் பேட்ஸ்மேன்களை காட்டிலும் சாதிக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இதுவரை

டி20 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா - பாகிஸ்தான் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 5, பாகிஸ்தான் 1, ஒரு போட்டி டையில் முடிவடைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024