Ind vs Ire Toss: 18 மாதங்களுக்கு பிறகு ரிஷப் பண்ட் கம்பேக்! நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்தியா
இந்திய அணியில் சுமார் 18 மாதங்களுக்கு பிறகு ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்துள்ளார். நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

டி20 உலகக் கோப்பை தொடரின் 8வது போட்டி இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையே நியூயார்க்கில் இன்று நடைபெறுகிறது.
குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருக்கும் இரு அணிகளும், இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது முதல் போட்டியில் களமிறங்குகின்றன. இந்திய அணி கடைசியாக விளையாடி 5 டி20 போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது. அயர்லாந்து அணி தனது கடைசி 5 டி20 போட்டியில் 3 வெற்றிகளை பெற்றிருக்கிறது.
இந்தியா பவுலிங்
இதையடுத்து இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் சுமார் 18 மாத இடைவெளிக்கு பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்துள்ளார். அதேபோல் ஐபிஎல் போட்டிகளில் சிக்ஸர்களால் எதிரணியை மிரள வைத்த ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்த்து நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறது.