England 1st Innings: இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வாரி எடுத்த ஜடேஜா! உணவு இடைவேளைக்குள் அவுட்டாகி ஷாக் கொடுத்த ரோகித்
Ind vs Eng 4th Test, England First Innings: நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜோ ரூட் கடைசி வரை ஆட்டமிழக்காத நிலையில், மற்றவர்களை பொறி வைத்து தட்டி தூக்கினார் ஜடேஜா.
இந்தியா - இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்காவது ஆட்டம் இன்று ராஞ்சியில் தொடங்கியுள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்திருக்கும் மூன்று போட்டிகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 106, ஆலி ராபின்சன் 31 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தது இங்கிலாந்து. சிறப்பாக பார்டனர்ஷிப் அமைத்து வந்த ரூட் - ராபின்சன் இன்றும் அதை தொடர்ந்து. பொறுமையாக ரன்களை சேர்த்து வந்த ராபின்சன் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அத்துடன் இந்த பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை எட்டியது.
58 ரன்கள் எடுத்திருந்தபோது ராபின்சன், ஜடேஜாவின் அற்புத சுழலில் சிக்கினார். ரூட் - ராபின்சன் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் பிரிந்தனர்.
இதன் பின்னர் பேட் செய்ய வந்த ஷோயிப் பஷிர், ஜேமி ஆண்டர்சன் ஆகியோரை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார் ஜடேஜா. இதனால் 104.5 ஓவரில் 353 ரன்களில் இங்கிலாந்து ஆல்அவுட்டாகியுள்ளது.
இரண்டாவது நாளில் இங்கிலாந்து கூடுதலாக 51 ரன்கள் மட்டும் எடுத்தது. இன்றைய நாளில் எஞ்சியிருந்த 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் ஜடேஜா.
இந்திய பவுலர்களில் ஜடேஜா 4, ஆகாஷ் தீப் 3, சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அஸ்வின் ஒரு விக்கெட்டை எடுத்தார்.
ரோகித் அவுட்
இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே 2 ரன்கள் எடுத்திருந்த ரோகித் ஷர்மா, ஆண்டர்சன் வேகத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்தியா தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
உணவு இடைவேளை வரை இந்தியா 10 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 27, கில் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்