Ind vs Eng 3rd Test: ஜெய்ஸ்வால் அதிரடி சதம்! கைவசம் 8 விக்கெட்டுகள் - வலுவான முன்னிலையில் இந்தியா
அஸ்வின் இல்லாத நிலையில் சிறப்பாக பவுலிங் செய்து இங்கிலாந்தை கட்டுப்படுத்திய இந்தியா, இரண்டாவது இன்னிங்கிஸ் பேட்டிங்கிலும் ஜெய்ஸ்வால் சதம், கில் அரைசதத்தால் 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 445 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவுக்கு பின்னர் குடும்ப அவசர நிலை காரணமாக இந்திய அணியின் ஸ்பின் பவுலரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் இன்று தொடங்கிய மூன்றாவது நாள் ஆட்டத்தில் முக்கிய பவுலரான அஸ்வின் இல்லாமல் ஆட்டத்தை தொடர்ந்தது இந்தியா. இன்றைய நாள் ஆட்டத்தை சிறப்பாக தொடங்கிய இங்கிலாந்து பின்னர் உணவு இடைவேளை நெருங்க சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
711 ஓவரில் 319 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்அவுட்டானது. அபாரமாக பந்து வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை இந்திய பவுலர்கள் அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பினார்கள்.
இந்திய பவுலர்களில் சிராக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
126 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த ரோகித் ஷர்மா இரண்டாவது இன்னிங்ஸில் 19 ரன்களில் நடையை கட்டினார்.
இவரை தொடர்ந்து பேட் செய்ய வந்த சுப்மன் கில் மற்றும் ஓபனிங் பேட்ஸ்மேன் ஜெஸ்வால் இணைந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.
இருவரும் இணைந்து 155 ரன்கள் சேர்த்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக பேட் செய்து சதமடித்தார். 104 ரன்கள் எடுத்த நிலையில் முதுகு வலியால் அவதிப்பட்ட ஜெயஸ்வால் ரிட்டயர்டு ஹர்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதற்கிடையே அரைசதத்தை பூர்த்தி செய்தார் சுப்மன் கில்.
நான்காவது பேட்ஸ்மேனாக வந்த ராஜத் பட்டிதார் டக்அவுட்டான நிலையில், நைட் வாட்ச்மேனாக குல்தீப் யாதவ் களமிறக்கப்பட்டார்.
மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 51 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது . தற்போது வரை இந்தியா 322 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையிலேயே உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்