Tamil News  /  Cricket  /  Ind Vs Eng 2nd Test: Yashasvi Jaiswal Century Helps India To Score 336 Runs On Day 1

Ind vs Eng 2nd Test: எப்படி போட்டாலும் அடி..! ஒன் மேன் ஷோ காட்டிய ஜெய்ஸ்வால் - முதல் நாள் முடிவில் இந்தியா பிரமாதம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 02, 2024 05:32 PM IST

இங்கிலாந்து பவுலர்கள் அனைவரையும் எவ்வித பயமும் இன்றி வெளுத்து வாங்கினார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். முதல் இரட்டை சதத்தை நோக்கி பேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார்.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஜெய்ஸ்வால்
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஜெய்ஸ்வால் (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 93 ஓவரிஸ் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபரமாக பேட் செய்து 179 ரன்கள் ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக இந்திய பேட்ஸ்மேன்களின் அதிகபட்ச ஸ்கோர் சுப்மன் கில் அடித்த 34 ரன்கள் தான் உள்ளது. மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் அரைசதம் அடிக்காத நிலையில், ஒன்மேன் ஷோ நிகழ்த்தியுள்ளார் ஜெயஸ்வால். ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் உள்ளார்.

இங்கிலாந்து பவுலர்களில் ரெஹான் அகமது, சோயிப் பசீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர்.

முதல் நாளில் விசாகபட்டினம் ஆடுகளம் மிகவும் மெதுவாக செயல்பட்ட நிலையில், முதல் செஷனில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். இதைத்தொடர்ந்து ஆடுகளத்துக்கு ஏற்ப நன்கு பேட் செய்த ஜெய்ஸ்வால் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டு 150 ரன்களுக்கு மேல் எடுத்து இரட்டை சதத்தை நோக்கி பேட் செய்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score stay connected with HT Tamil