தமிழ் செய்திகள்  /  Cricket  /  Ind Vs Eng 2nd Test: Jaiswal Hits Century Agaisnt England Bowling Attack, India Loss 3 Wickets For 225 Runs

Ind vs Eng 2nd Test: தூள் கிளப்பிய பேட்டிங் - சிக்ஸருடன் சதமடித்த ஜெய்ஸ்வால்! தேநீர் இடைவேளை வரை இந்தியா நிதான பேட்டிங்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 02, 2024 02:24 PM IST

இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் இரண்டாவது சதத்தை பதிவு செய்துள்ளார் இளம் பேட்ஸ்மேன் ஆனார் யஷஸ்வி ஜெயஸ்வால்.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் யஷஸ்வி ஜெயஸ்வால்
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் யஷஸ்வி ஜெயஸ்வால்

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. உணவு இடைவேளைக்கு முன்னரே ரோஹித் ஷர்மா 14, சுப்மன் கில் 34 ரன்கள் எடுத்த நிலையில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

சிறப்பாக பேட் செய்த இளம் இடதுகை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் அரைசதமடித்து 51 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவருடன் ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

இதையடுத்து இரண்டாவது செஷனில் ஜெய்ஸ்வால் - ஷரேயாஸ் தொடர்ந்தனர். தனது பேட்டிங் பார்மை தொடர்ந்த ஜெய்ஸ்வால், தொடர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்டு சதமடித்தார். இடது கை ஸ்பின்னர் ஹார்ட்லி வீசிய ஆட்டத்தின் 48.3 ஓவரில், சிக்ஸருடன் ஜெயஸ்வால் தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

ஆறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜெயஸ்வால் இரண்டாவது சதத்தை அடித்துள்ளார். தனது இன்னிங்ஸில் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்களை ஜெயஸ்வால் அடித்துள்ளார்.

இரண்டாவது செஷன் முடிந்து தேநீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 125, ராஜத் பட்டிதார் 25 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து பவுலர்களில் ஆண்டர்சன், சோயிப் பசீர், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர்.

முன்னதாக ஜெயஸ்வால் - ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்தனர். 90 ரன்கள் சேர்த்த நிலையில், ஷ்ரேயாஸ் 27 ரன்களில் ஹார்ட்லி பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இவரும் கடைசி 10 இன்னிங்ஸும் ஒரு அரைசதம்கூட விளாசாத நிலையில், இன்றும் பேட்டிங்கில் சொதப்பினார். ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பேட்டிங்கில் பார்ம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score stay connected with HT Tamil